மத்தியபிரதேசத்தின் இந்தூர் நகரிலிருந்து மராட்டியம் மாநிலம் புனேநகர் நோக்கி மராட்டியஅரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த பேருந்தில் 55 பேர் பயணம் மேற்கொண்டுள்ளனர். இதையடுத்து மத்தியபிரதேசம் தார் மாவட்டம் கல்கோட்டிலுள்ள நர்மதை ஆற்று பாலத்தில் பேருந்து சென்று கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராத வகையில் பேருந்து கட்டுப்பாட்டை இழந்து 100 அடி உயர பாலத்திலிருந்து ஆற்றுக்குள் தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதனால் ஆற்றில் மூழ்கி 13 பேர் உயிரிழந்தனர். இதில் 10 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் […]
