பிரபல நடிகை படகில் சென்றபோது நிலைதடுமாறி கீழே விழுந்து பலியான சம்பவத்தை அடுத்து அவரது தாயார் தற்போது குற்றச்சாட்டு ஒன்றை முன்வைத்துள்ளார். நிடா பட்சரவீரப்போங் என்பவர் தாய்லாந்து நாட்டில் பிரபல நடிகையாக வலம் வந்தவர். தாய்லாந்தில் பிரபல தொலைக்காட்சியில் ஒலிபரப்பாகும் சீரியலில் கதாநாயகியாக வலம் வந்தவர். இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இந்நிலையில் சென்ற வியாழக்கிழமை பாங்காக்கின் நந்தபுரியில் இருக்கும் சாவ்பிரயா ஆற்றில் போட்டிங் செய்தார் நிடா. போட்டிங் செய்துகொண்டிருக்கும்போது நிடா நிலைதடுமாறி ஆற்றில் விழுந்ததாக கூறப்படுகின்றது. […]
