தமிழ் திரையுலகில் பிரபல முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஸ்ருதிஹாசன். இவர் தமிழ், தெலுங்கு என நிறைய படங்களில் பிசியாக நடித்து வருகிறார். கேஜிஎப் படம் புகழ் பிரசாந் நீல் இயக்கத்தில் பிரபாஸோடு சேர்ந்து சலார் படத்தில் நடித்திருக்கிறார். பிரபாஸுக்கு ஜோடியாக நடித்திருப்பது இதுவே முதல் முறையாகும். அதுமட்டுமின்றி கோபிசந் இயக்கத்தில் பாலகிருஷ்ணா நடிக்கும் படத்திலும் அவருக்கு ஜோடியாக நடித்திருக்கிறார் . இந்நிலையில் மற்றவர்களுக்கு நம் மீதான விருப்பம் மாறிக்கொண்டே இருக்கும் அவர்களுக்காக நாம் நம்மை மாற்றிக்கொள்ள கூடாது […]
