டெல்லி நிஜாமுதீனில் தப்லீக் ஜமாத் அமைப்பின் தொழிலாளர்கள் மற்றும் அவர்களின் தொடர்புகள் என மொத்தம் 22,000 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என மத்திய உள்துறை அமைச்சகத்தின் இணை செயலாளர் புண்யா சலிலா ஸ்ரீவாஸ்தவா தெரிவித்துள்ளார். இன்று காலை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,902 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 183 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளதாகவும் சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. மேலும் கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை 68 ஆக உயர்ந்துள்ளது. மேலும், […]
