நவம்பர் 25 கிரிகோரியன் ஆண்டின் 329 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 330 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 36 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் 885 – வைக்கிங்கு படையினர் 300 கப்பல்களில் செயின் ஆற்றில் சென்று பாரிசைக் கைப்பற்றினர். 1034 – இசுக்கொட்லாந்து மன்னர் மாயெல் கோலுயிம் இறந்தார். அவரது பேரன் டொன்சாட் புதிய மன்னனாக முடிசூடினான். 1120 – இங்கிலாந்து மன்னன் முதலாம் என்றியின் மகனும், முடிக்குரிய இளவரசருமான வில்லியம் அடெலின் பயணஞ்செய்த கப்பல் ஆங்கிலக் கால்வாயில் மூழ்கியதில் வில்லியம் இறந்தான். 1343 – திரேனியக் கடலில் நிலநடுக்கம் மற்றும் ஆழிப்பேரலை ஏற்பட்டதில் நாபொலி உட்படப் பல நகரங்கள் சேதமடைந்தன. 1510 – போர்த்துக்கீசக் கடற்படை அபோன்சோ டி அல்புகெர்க்கே தலைமையிலும், […]
