சனவரி 15 கிரிகோரியன் ஆண்டின் 15 ஆம் நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 350 (நெட்டாண்டுகளில் 351) நாட்கள் உள்ளன. திருவள்ளுவர் ஆண்டு தொடக்கம். இன்றைய தின நிகழ்வுகள் 69 – உரோமைப் பேரரசின் ஆட்சியை ஓட்டோ கைப்பற்றித் தன்னைப் பேரரசராக அறிவித்தார். எனினும் மூன்று மாதங்களில் தற்கொலை செய்து கொண்டார். 1559 – முதலாம் எலிசபெத் இங்கிலாந்தின் மகாராணியாக முடிசூடினார். 1582 – லிவோனியா மற்றும் எஸ்தோனியாவை உருசியா போலந்து-லித்துவேனியா பொதுநலவாயத்திடம் கையளித்தது. 1759 – பிரித்தானிய அருங்காட்சியகம் திறக்கப்பட்டது. 1777 – அமெரிக்கப் புரட்சிப் போர்: புதிய கனெடிகட் விடுதலையை அறிவித்தது. 1799 – இலங்கைக்குள் அடிமைகள் கொண்டுவரப்படுவது முற்றாகத் தடை செய்யப்பட்டது.[1] 1815 – பிரித்தானிய அமெரிக்கப் போர், 1812: அமெரிக்கக் […]
வரலாற்றில் இன்று ஜனவரி 15…!!
