மார்ச் 5 கிரிகோரியன் ஆண்டின் 64 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 65 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 301 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் 363 – உரோமைப் பேரரசர் யூலியன் அந்தியோக்கியாவில் இருந்து 90,000 படையினருடன் சாசானியரைத் தாக்கப் புறப்பட்டான். இப்போரில் யூலியன் இறந்தான். 1496 – இங்கிலாந்து மன்னர் ஏழாம் என்றி அறியப்படாத நிலங்களைக் கண்டறிவதற்கான உரிமையை ஜான் கபோட்டுக்கும் அவரது மகன்களுக்கும் வழங்கினார். 1616 – 73 ஆண்டுகளுக்கு முன்னர் வெளியிடப்பட்ட நிக்கோலாசு கோப்பர்னிக்கசின் பரலோகக் கோளங்களின் சுழற்சி என்ற நூல் தடைசெய்யப்பட்ட ஆவணமாக கத்தோலிக்கத் திருச்சபையால் அறிவிக்கப்பட்டது. 1770 – பாஸ்டன் படுகொலை: பாஸ்டனில் அமெரிக்கர்களுக்கும் பிரித்தானியப் படையினருக்கும் இடையில் கிளம்பிய கலவரத்தை […]
வரலாற்றில் இன்று மார்ச் 5…!!
