சூன் 13 கிரிகோரியன் ஆண்டின் 164 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 165 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 201 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் 313 – உரோமைப் பேரரசில் அனைவருக்கும் சமயச் சுதந்திரம் அளிக்கும் கட்டளையை உரோமைப் பேரரசர் முதலாம் கான்ஸ்டன்டைன் பிறப்பித்தார். 1381 – இலண்டனில் விவசாயிகளின் போராட்டத்தினால் சவோய் அரண்மனை எரியூட்டப்பட்டது. 1514 – 1,000 தொன்னிற்கும் அதிகமான பருமனுள்ள அக்காலத்தில் மிகப் பெரும் போர்க் கப்பல் இங்கிலாந்தில் அமைக்கப்பட்டது. 1525 – கத்தோலிக்க திருச்சபையின் கட்டளையை மீறி மார்ட்டின் லூதர் கத்தரீனா வொன் போரா என்பவரைத் திருமணம் புரிந்தார். 1625 – இங்கிலாந்தின் முதலாம் சார்லசு மன்னர் கத்தோலிக்க இளவரசி பிரான்சின் என்றியேட்டா மரியாவைத் […]
வரலாற்றில் இன்று ஜூன் 13…!!
