மே 2 கிரிகோரியன் ஆண்டின் 122 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 123 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 243 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் 1536 – இங்கிலாந்தின் அரசி ஆன் பொலின், முறைபிறழ்புணர்ச்சி, தகாப் பாலுறவு, மாந்திரீகம், தேசத்துரோகம் போன்ற குற்றச்சாட்டுகளுக்காகக் கைது செய்யப்பட்டார். 1568 – லொக் லெவென் அரண்மனையில் சிறை வைக்கப்பட்டிருந்த ஸ்கொட்லாந்து அரசி முதலாம் மேரி அங்கிருந்து தப்பி வெளியேறினார். 1611 – இங்கிலாந்தின் முதலாம் ஜேம்சு மன்னரின் ஆதரவில் விவிலியம் இங்கிலாந்து திருச்சபைக்காக மொழிபெயர்க்கப்பட்டு இலண்டனில் வெளியிடப்பட்டது. 1670 – இங்கிலாந்தின் இரண்டாம் சார்லசு மன்னர் வட அமெரிக்காவில் மென்மயிர் வணிகத்துக்கான உரிமையை அட்சன் விரிகுடா கம்பனிக்குத் தந்தார். 1808 – மத்ரித் மக்கள் பிரான்சிய ஆக்கிரமிப்பாளருக்கெதிராக கிளர்ச்சியில் ஈடுபட்டனர். 1814 – முதலாவது மெதடிஸ்த ஆயர் தோமசு கோக் மதப்பரப்புனராக […]
வரலாற்றில் இன்று மே 2…!!
