விருதுநகர் மாவட்டத்தில் மக்களின் தேவைக்கேற்ப இன்று நள்ளிரவு வரை பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து அதிகாரி தெரிவித்துள்ளார். கொரோனா பரவல் காரணமாக நாளை முதல் தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் பொதுமக்கள் அத்தியவசிய பொருட்களை வாங்குவதற்கு நேற்று மாலை முதல் இன்று நள்ளிரவு வரை பொது போக்குவரத்துக்கு அனுமதி அளித்துள்ளது. இதனையடுத்து விருதுநகர் மாவட்டத்தில் நேற்று மொத்தமாக 35 பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து இன்று மக்கள் கூட்டம் அதிகளவில் வருவதால் கூட்ட நெரிசல் ஏற்படக்கூடாது […]
