கூட்ட நெரிசல் இல்லாத நேரங்களில் மக்கள் ரயிலில் பயணம் செய்யலாம் என்று மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார். கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் ரயில் சேவைகள் அனைத்தும் முடங்கின. இந்நிலையில் ஊரடங்கு தளர்வுக்கு பிறகு ரயில் சேவை தொடங்கியதை அடுத்து ஊழியர்களுக்கு மட்டும் ரயில் சேவை தொடங்கியது. இந்நிலையில் சென்னை புறநகர் ரயில்களில் கூட்ட நெரிசல் இல்லாத நேரங்களில் நாளை முதல் பொதுமக்கள் பயணம் செய்யலாம் என்று மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் அறிவித்துள்ளார். […]
