அமெரிக்கா-கனடா எல்லையில் கைக்குழந்தை உட்பட நால்வர் கடுமையான பனியில் உறைந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. கனடாவின் எல்லை பகுதிக்குள் உறைந்து போன நிலையில் உயிரிழந்து கிடந்த 4 பேரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்பட்டிருக்கிறது. இவர்கள் இந்தியாவை சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. இது தொடர்பில் மனித கடத்தல் கும்பலை சேர்ந்த ஒரு நபரை போலீசார் கைது செய்திருக்கிறார்கள். அமெரிக்க நாட்டின் எல்லை பகுதிக்கு அருகில் கனடாவின் எல்லைக்குள் கைக்குழந்தை உட்பட நான்கு […]
