கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை செய்த நான்கு பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள ஆற்காடு பகுதியில் சட்ட விரோதமாக கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்திற்கு இடமான வகையில் நான்கு நபர்கள் நின்றுகொண்டிருந்ததை காவல்துறையினர் பார்த்தனர். அதன்பின் காவல்துறையினர் அவர்களை பிடித்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அவர்கள் ஆற்காடு பகுதியில் வசிக்கும் ஜெயக்குமார், […]
