காலிங்கராயன் வாய்க்காலில் தண்ணீர் திறக்கப்பட்டதால் வயல்களில் நாற்று நடும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள பவானிசாகர் அணையில் இருந்து காலிங்கராயன் வாய்க்காலில் திறக்கப்படும் தண்ணீர் மூலமாக 15 ஆயிரத்து 743 ஏக்கர் விவசாய நிலப்பகுதி பாசன வசதி பெற்று வருகின்றது. இதனால் முதல் போக நன்செய் பாசனத்திற்கு காலிங்கராயன் வாய்க்காலில் தண்ணீர் திறக்ககோரி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதனையடுத்து விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று தமிழக அரசு வாய்க்காலில் தண்ணீர் திறந்து விட உத்தரவிட்டது. […]
