Categories
உலக செய்திகள்

பயணம் செய்யும் போஜி…. தொடங்கப்பட்டுள்ள சமூக வலைத்தளம்…. வைரலாகும் வீடியோ காட்சிகள்….!!

போஜி என்ற தெருநாய் பயணம் செய்யும் வீடியோ காட்சிகளானது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. நம் அனைவருக்கும் செல்லப்பிராணிகளை கண்டாலே அலாதியாக இருக்கும். அதிலும் நாயைக் கண்டவுடன் அனைவரின் மனதிலும் ஒரு மகிழ்ச்சி ஏற்படும். அது போன்று துருக்கியில் போஜி என்ற தெருநாயானது பொது போக்குவரத்தை பயன்படுத்தி பயணம் செய்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிலும் போஜி தினமும் இஸ்தான்புல்லில் உள்ள பேருந்து மற்றும் மெட்ரோ ரயிலில் மனிதர்களோடு பயணம் செய்து வருகிறது. மேலும் இது மனிதர்களுக்கு எந்தவொரு இன்னலையும் […]

Categories
தேசிய செய்திகள்

சீச்சீ கருமம்… பக்கத்து வீட்டில் கத்திய நாய்… எட்டிப் பார்த்த உரிமையாளருக்கு ஷாக்… வீடியோ எடுத்து போட்டுக்கொடுத்த இளைஞர்..!!!

நாயுடன் உடலுறவு மேற்கொண்ட முதியவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ஹரியானா மாநிலம் குருகிராமில் உள்ள சோஹ்னா என்ற கிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ். இவருக்கு வயது 67. இவர் வீட்டின் அருகில் வசிக்கும் முகேஷ் என்பவர் நாய் ஒன்றை வளர்த்து வருகிறார். இந்நிலையில் அந்த நாய் திடீரென காணாமல் போனது. எங்கு தேடியும் அந்த நாய் கிடைக்கவில்லை. பின்னர் சம்பவம் நடந்த தினத்தன்று இரவில் முதியவரின் வீட்டிலிருந்து நாய் குறைக்கும் சத்தம் கேட்டது. இதையடுத்து சந்தேகமடைந்த முகேஷ் ஜன்னல் […]

Categories
தேசிய செய்திகள்

பிளாஸ்டிக் பாட்டிலில் சிக்கிக்கொண்ட தலை… “நாய்க்கு உதவிக்கரம் நீட்டிய இளைஞர்கள்”…. வைரலாகும் வீடியோ…!!!

பிளாஸ்டிக் பாட்டிலுக்குள் தலையை விட்டு மாட்டிகொண்ட நாயை சிலர் காப்பாற்றிய வீடியோவானது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. மனிதனுக்கு மிகவும் நெருக்கமான செல்லப்பிராணி என்றால் அது நாய்தான். நன்றியுள்ள பிராணி என்று கூறப்படும் நாய், தன் எஜமானருக்காக எதையும் செய்யக் கூடியது. தற்போது சமூக வலைத்தளங்களில் சைக்கிளில் செல்லும் குழு ஒன்று ஒரு நாய்க்கு உதவிய வீடியோ வைரலாகி வருகிறது. ஒரு பிளாஸ்டிக் பாட்டில் ஒரு நாயின் தலை சிக்கி கொண்டது. இதை கண்ட ஒரு சைக்கிள் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

எதுக்கு இப்படி பண்ணீங்க…. சத்தம் கேட்டு வந்த மக்கள்…. போலீஸ் நடவடிக்கை….!!

தெரு நாயை துப்பாக்கியால் சுட்ட வாலிபரை காவல்துறையினர் கைது செய்தனர். ஈரோடு மாவட்டத்தில் உள்ள லிங்க கவுண்டன் வலசு பகுதியில் கார் மெக்கானிக்காக மூர்த்தி வசித்து வருகிறார். இவருக்கு சொந்தமான விவசாய நிலம் அப்பகுதியில் இருக்கிறது. இந்த விவசாய தோட்டத்திற்குள் தெருநாய் ஒன்று புகுந்ததால் மூர்த்தி தான் வைத்திருந்த துப்பாக்கியால் அதை சுட்டுள்ளார். இதனால் படுகாயமடைந்த நாய் வலி தாங்க முடியாமல் சத்தமிட்டுள்ளது. அந்த சத்தம் கேட்டு அப்பகுதி மக்கள் ஓடி வந்து நாயை எதற்காக இப்படி […]

Categories
தேசிய செய்திகள்

ரூ.2.5 லட்சமா… நாய்க்காக முழு விமானத்தையும் புக் செய்த உரிமையாளர்… ஜம்முனு வந்திறங்கிய நாய்…!!!

மகாராஷ்டிர மாநிலம் மும்பையைச் சேர்ந்த ஒருவர் தனது நாய்க்காக ஏர் இந்தியா நிறுவனத்தின் வணிக வகுப்பு இருக்கைகள் அனைத்தையும் முன்பதிவு செய்துள்ள சம்பவம் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. மும்பையைச் சேர்ந்த நபரொருவர் டாக்ஜோ என்ற தனது வளர்ப்பு நாயை சுமார் 2.5 லட்சத்திற்கும் அதிகமாக செலவு செய்து மும்பையில் இருந்து சென்னைக்கு அழைத்துச் சென்றுள்ளார். மும்பையில் இருந்து சென்னைக்கு ஏர் இந்தியா விமானத்தின் வணிக வகுப்பு பிரிவில் ஒரு டிக்கெட்டுக்கு 20 ஆயிரம் ரூபாய் ஆகும். எனில் […]

Categories
தேசிய செய்திகள்

பொண்ணு பார்த்து… மண்டபம் பார்த்து… சொந்தக்காரங்க கூப்பிட்டு… “பிரியாணியோட தடபுடலாக நடந்த நாய்களின் திருமணம்…!!!

கேரளாவில் ஆன்லைனில் ஜோடி தேடி நாய்களுக்கு திருமணம் செய்து வைத்த வினோத சம்பவம் அரங்கேறியுள்ளது கேரளாவில் உள்ள திருச்சூர் அருகே உள்ள புன்னையூர் குளம் அருகே வசித்து வருகிறார் செல்வி. இவருக்கு அர்ஜுன் ஆகாஷ் என்ற 2 மகன்கள் உள்ளனர். இவர்கள் தங்களது வீட்டில் குட்டப்பு என்ற ஆண் நாயை வளர்த்து வருகின்றனர். ஒரு வயதான அந்த நாய்க்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர். இதற்காக பல இடங்களில் பெண் நாய் ஒன்றை தேடியும் கிடைக்கவில்லை. […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

கிணற்றில் தவறி விழுந்த நாய்…. தகவல் தெரிவித்த மக்கள்…. தீயணைப்புத் துறையினரின் செயல்….!!

தோட்டத்து கிணற்றில் தவறி விழுந்த நாயை  தீயணைப்புத்துறையினர் உயிருடன் மீட்டனர். திருப்பூர் மாவட்டத்திலுள்ள உடுக்கம்பாளையம் பகுதியில் தோட்டத்தில் வளர்க்கப்படும் நாய் அங்குள்ள ஒரு கிணற்றில் தவறி விழுந்து விட்டது. இதனால் நாய் கிணற்றின் உள்ள பக்கவாட்டில் பாறையை பிடித்தபடி இரவு முழுவதும் குரைத்துக் கொண்டிருந்தது. இதனை பார்த்த அப்பகுதி மக்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். அந்த தகவலின்படி அலுவலர் ராமகிருஷ்ணன் தலைமையில் தீயணைப்பு துறையினர் அந்த இடத்திற்கு விரைந்து சென்று கயிறு மூலம் கிணற்றிலிருந்து நாயை […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

கழுத்தில் டப்பா சிக்கிட்டு…. செய்வதறியாது சுற்றி திரிந்த நாய்…. தீயணைப்புத் துறையினரின் செயல்….!!

நாயின் கழுத்து பகுதியில் சிக்கியிருந்த டப்பாவை தீயணைப்புத்துறையினர் மெதுவாக அகற்றினர். ஈரோடு மாவட்டத்திலுள்ள அந்தியூர் பகுதியில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு தெருநாய் ஒன்று பிளாஸ்டிக் டப்பாவில் இருந்த உணவை சாப்பிடுவதற்காக உள்ளே தலையை விட்டுள்ளது. இதனையடுத்து நாய் டப்பாவில் இருந்த உணவை சாப்பிட்டுவிட்டு தன்னுடைய தலையை எடுக்க முயற்சி செய்தது. ஆனால் நாய் தலை டப்பாவுக்குள் சிக்கி வெளியே வர முடியாமல் தவித்தது. அதன்பின் கடந்த 10 நாட்களாக அந்த நாய் எந்த உணவையும் சாப்பிட […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

ரொம்ப தொல்லை பண்ணுது…. அதான் இப்படி பண்றோம்…. மாநகராட்சி நிர்வாகத்தின் நடவடிக்கை….!!

தெருக்களில் சுற்றித் திரிந்த 30 நாய்களை பிடித்து கருத்தடை செய்யப்பட்டு வருகின்றது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் மாநகராட்சியில் தெரு நாய் தொல்லை அதிகமாக இருக்கின்றது. எனவே தெருநாய்கள் இரு சக்கர வாகனத்தில் செல்பவர்களை துரத்துவதும், தெருக்களின் வீடுகளின் முன் விளையாடும் குழந்தைகளை கடிப்பதுமாக இருக்கின்றது. இதனால் தெரு நாய் தொல்லையை கட்டுப்படுத்த மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. அதன்படி தெருக்களில் சுற்றித் திரியும் நாய்களை பிடித்து கருத்தடை செய்யப்பட்டு வருகின்றது. அதன்படி மாநகரில் பல்வேறு […]

Categories
தேசிய செய்திகள்

இங்கிலாந்து அடித்த கோலுக்கு ஆட்டம் போட்ட நாய்… வைரலாகும் வீடியோ…!!!

நாம் வீட்டில் வளர்க்கும் செல்லப் பிராணிகள் வீட்டிலுள்ள சூழ்நிலைகளுக்கு ஏற்றவாறு அதுவும் நடந்து கொள்ளும். நாம் சந்தோஷமாக இருந்தால் அதுவும் சந்தோஷமாக இருக்கும், நாம்  சோகமாக இருக்கும்போது நம்முடன் சேர்ந்து அதுவும் சோகமாக இருக்கும். செல்லப்பிராணிகளை வளர்க்கும் முதலாளிகள் கிரிக்கெட், கால்பந்து, ஹாக்கி போன்ற விளையாட்டுகளை டிவியில் பார்க்கும்போது நமக்கு பிடித்தவர் கோல் அடித்து விட்டாளோ அல்லது நமக்கு பிடித்த அணி வென்று விட்டாளோ மகிழ்ச்சியில் துள்ளி குதிப்போம். அதைப் பார்க்கும் செல்லப்பிராணிகளும் அதேபோன்று நடனமாடி சந்தோசத்தை […]

Categories
தேசிய செய்திகள்

கேரளாவில் நாயை கட்டி வைத்து… அடித்து கொடூரமாக கொன்ற 3 சிறுவர்கள்… வைரலாகும் பதிவு…!!!

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் கடற்கரையில் 9 வயதுடைய லேப்ரடார் நாயை கட்டி வைத்து, மூன்று சிறுவர்கள் அடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கேரளா மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டம் அருகில் உள்ள அடிமலத்துரா என்ற கடற்கரையில் 9 வயதுடைய லேப்ரடார் வகை நாயை சிறுவர்கள் சிலர் கட்டி இழுத்து சென்று படகில் தலைகீழாக கட்டிவைத்து அடித்து சித்திரவதை செய்து கொலை செய்துள்ளனர். அவர்களின் வெரிதனம் அடங்கிய இந்த வீடியோவானது தற்போது இணையதளத்தில் வெளியானது.இதனையடுத்து #JusticeForBruno என்ற […]

Categories
தேசிய செய்திகள்

நடனமாடும் பெண்ணை… ரசித்து கைத்தட்டி உற்சாகப்படுத்தும் நாய்… வைரலாகும் வீடியோ….!!!

நடனமாடும் பெண்ணின் நடனத்தை பார்த்து அங்கு இருந்த நாய் ஒன்று அவரை உற்சாகப்படுத்தும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. நான்கு கால்களில் நடக்கும் நாய் இரண்டு கால்களில் நிற்பது என்பது மிகவும் அரிதான ஒன்று. காவல்துறையில் வளர்க்கப்படும் நாய்களுக்கு பயிற்சி அளிப்பதன் மூலம் மட்டுமே இவ்வாறு சாத்தியமாகும். சில வீடுகளில் வளர்க்கும் செல்லப் பிராணிகளான நாய்கள் இரண்டு கால்களால் நின்று மனிதர்களுக்கு பாசத்தை வெளிப்படுத்தும். அப்படி வளர்க்கப்படும் நாய் ஒன்று நடனமாடும் பெண் ஒருவரை பார்த்து […]

Categories
உலக செய்திகள்

13 வருஷமா துணையா இருந்துச்சு..! செல்லப் பிராணியை இழந்த வருத்தம்… அதிபர் பதிவிட்ட டுவிட்..!!

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தன்னுடைய வீட்டில் வளர்த்து வந்த செல்ல பிராணியான நாய் இறந்து விட்டதாக தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். கடந்த ஜனவரி மாதம் அமெரிக்க அதிபராக பதவியேற்ற பிறகு ஜோ பைடன் தனது குடும்பத்துடன் வெள்ளை மாளிகைக்கு சென்றுள்ளார். அதோடு ஜோ பைடன் வெள்ளை மாளிகையில் தனது செல்லப் பிராணிகளான “சாம்ப் மற்றும் மேஜர்” இரண்டு “ஜெர்மன் ஷெப்பர்ட்” நாய்களையும் வளர்த்து வந்துள்ளார். அதில் நேற்றுமுன்தினம் சாம்ப் திடீரென இறந்துள்ளது. அதை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ரசிகர்களுக்கு மகனை அறிமுகப்படுத்திய வரலட்சுமி…. வெளியான செம க்யூட் வீடியோ…!!!

பிரபல நடிகை வரலட்சுமி தனது மகனை அறிமுகப்படுத்தியுள்ளார். தமிழ் சினிமாவில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளியான ‘போடா போடி’ திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் வரலட்சுமி. இதை தொடர்ந்து கதாநாயகியாகவும், வில்லியாகவும் பல வேடங்களில் துணிச்சலாக நடித்து தமிழ் ரசிகர்களிடம் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார். இவர் தமிழில் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளிலும் நடித்து வருகிறார். நடிகை வரலட்சுமியிடம் காட்டேரி, கலர்ஸ், யானை,பாம்பன் உள்ளிட்ட பல திரைப்படங்கள் கைவசம் உள்ளது. இப்படி […]

Categories
தேசிய செய்திகள்

ஹீலியம் பலூனில் நாயை கட்டி பறக்கவிட்டு வீடியோ… பிரபல யூடியூபர் கைது…!!

டெல்லியை சேர்ந்த நபரொருவர் ஹீலியம் பலூனில் நாயை கட்டி பறக்கவிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் கண்டனத்தை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியை சேர்ந்த இளைஞர் ஒருவர் யூடியூப் ஒன்றை நடத்தி வருகிறார். அவரது சேனலில் 40 லட்சத்துக்கும் அதிகமானோர் சப்ஸ்கிரைப் செய்துள்ளன. இவரது வீடியோக்கள் பல லட்சம் வியூஸ்களை அள்ளிக் குவிக்கும். சமீபத்தில் இவர் தனது நாய்க்குட்டியை ஹீலியம் பலூனில் கட்டி பறக்க விட்டு அதை வீடியோவாக எடுத்து அவரது சேனலில் அப்லோட் செய்து இருந்தார். அந்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

செம க்யூட்…. முதல் மகனை அறிமுகப்படுத்திய இந்துஜா…. வைரலாகும் புகைப்படம்….!!!

நடிகை இந்துஜா தனது முதல் மகனை சமூக வலைத்தள பக்கத்தில் மூலம் அறிமுகப்படுத்தியுள்ளார். தமிழ் சினிமாவில் வெளியான மேயாதமான், மெர்குரி, பிகில் உள்ளிட்ட படங்களில் நடித்திருப்பவர் நடிகை இந்துஜா. அனைத்து படங்களிலும் சாதாரணமாக நடித்திருந்த இந்துஜா சூப்பர் டூப்பர் படத்தில் கொஞ்சம் கவர்ச்சியாக நடித்திருந்தார். இந்நிலையில் சமூக வலைத்தள பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் இந்துஜா அவ்வப்போது தனது புகைப்படத்தை அதில் வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் அவர் ஒரு நாயுடன் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படத்தை அவர் […]

Categories
உலக செய்திகள்

அப்படி போடு…!! “ரிட்டையர் ஆகும் நாய்களுக்கும், குதிரைகளுக்கும் இனிமேல் பென்ஷன்”… வருகின்றது அதிரடி சட்டம்…!!

போலந்து நாட்டில் பணிபுரிந்து ஒய்வு பெற்ற நாய்களுக்கும்,குதிரைகளுக்கும் பென்சன் வழங்க அந்நாட்டு உள்துறை அமைச்சகம் புதிய சட்டத்தை கொண்டுவர இருக்கின்றது. போலந்தில் திருடர்களை பிடிப்பதற்கு, போதை பொருட்களை கண்டறிவதற்கு, மீட்பு பணியில் ஈடுபவதற்கு  போன்ற சேவைகளுக்காக காவல்துறை,தீயணைப்பு துறை மற்றும் எல்லைக்காவல் துறை போன்ற இடங்களில்  நாய்கள் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் இத்தனை வேலைகள் செய்தாலும் கூட அந்த நாய்களுக்கு சாப்பாடும், தங்குவதற்கு இடமும் மட்டுமே அரசால் கொடுக்கப்படுகின்றது. இதுமட்டுமன்றி பணியிலிருந்து ஓய்வு பெற்ற நாய்களுக்கும் குதிரைகளுக்கும் அரசு […]

Categories
உலக செய்திகள்

“டெலிவரி செய்யப்பட்ட பொருட்கள் மாயம்”… இது உன் வேலை தானா…? சிசிடிவி-யில் பதிவான நாயின் குறும்புத்தனம்…!!

டெலிவரி செய்யப்ட்ட பொருட்களை நாய் தூக்கி சென்றது சிசிடிவி-யில்  பதிவாகியுள்ளது. அமெரிக்காவில் Jenny Anchondo என்ற தொலைக்காட்சித் தொகுப்பாளினி ஆன்லைனில் சில பொருட்களை ஆர்டர் செய்துள்ளார். ஆனால் அவர் வீட்டிற்கு டெலிவரி செய்யப்படும் பொருட்கள் சில நாட்களாகவே காணாமல் போயுள்ளது.  இந்நிலையில் திடீரென்று நள்ளிரவு வீட்டிற்கு முன்பு யாரோ ஒருவர் நடமாடுவதை அவரது கணவர் கவனித்துள்ளார். இதனால் தூங்கிக் கொண்டிருந்த Jenny -யை எழுப்பி இருவரும் தங்கள் வீட்டிற்கு முன்பு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் காட்சிகளை பார்த்துக் […]

Categories
உலக செய்திகள்

என்னமா இப்படி பண்றீங்களே….! நாயை ஓநாயக மாற்றிய சீனா…. வைரலாகும் வீடியோ …!!

சீனாவில்உள்ள மிருகக்காட்சி சாலையில் நாயை ஓநாய்போல் கட்ட முயன்றது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. சீனாவில் ஹூபே நகரில் சியானிங் பகுதியில் உள்ள சியாங்வூஷன் மிருகக்காட்சி சாலை உள்ளது. இதில் ஓநாய் இருந்த கூண்டில் நாய் இருந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. ஓநாய் போல நாயை காட்ட முயன்றது விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. இதுகுறித்து மிருகக்காட்சி அதிகாரிகளிடம் கேட்ட பொழுது, அந்தக் கூண்டில் ஓநாய் இருந்ததென்றும், அது உடல் நல குறைவால் உயிரிழந்ததாகவும் அந்த இடத்தில் […]

Categories
உலக செய்திகள்

“காதலரின் நாயுடன் வாக்கிங்”… 6 மாத கர்ப்பிணியை கடித்துக் கொன்ற நாய்… DNA சோதனையில் வெளிவந்த உண்மை…!!

பிரான்சில் 6 மாத கர்ப்பிணி பெண் நாய் கடித்து உயிரிழந்த விவகாரத்தில் அவரது காதலன் மீது கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. Elisa Pilarski என்ற 29 வயது பெண் பிரான்சில் உள்ள வனப்பகுதியில் உடல் முழுவதும் ரத்தக் காயங்களுடன் நிர்வாண நிலையில் இறந்து கிடந்துள்ளார். இதனால் வனப்பகுதியில் வேட்டைக்கு செல்லும் நாய்கள் கடித்து குதறியதில் Elisa உயிரிழந்திருக்கலாம் என்று சந்தேகம் கிளம்பியது. இதனால் வேட்டை நாய்களை கொண்டு வேட்டையாடுவதற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். […]

Categories
உலக செய்திகள்

சொல்லுறத கேளுங்க… “இனிமேல் யாரும் இந்த மாதிரியான photo-வை பகிராதீங்க”… எச்சரிக்கும் போலீஸ்…!!

பிரிட்டனில் செல்லப்பிராணிகளின் புகைப்படத்தை சமூக வலைத்தளங்களில் பகிர வேண்டாம் என காவல்துறையினர் எச்சரித்துள்ளனர். பிரிட்டனில் நாய் திருட்டு அதிகரிப்பதால் உரிமையாளர்கள் யாரும் செல்லப்பிராணிகளின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சமூக வலைதளங்களில் பகிர வேண்டாம் என்று காவல்துறையினர் எச்சரித்துள்ளனர். சமூக வலை தளத்தில் தங்களின் விலை உயர்ந்த செல்லப்பிராணிகள் பற்றிய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிடும் அதன் உரிமையாளர்கள் தங்களுக்கென்று இருக்கும் கணக்கின் Privacy Settings-ஐ  சரியாக set செய்வதில்லை. மேலும் வெளியிடும் புகைப்படங்களில் கூடுதலாக “Tags”-களையும் பயன்படுத்துகின்றனர். […]

Categories
மாநில செய்திகள்

8 நாய்கள் உயிரிழப்பு…. ஆபத்தான புதிய வைரஸ்…. மக்கள் அச்சம்…!!

நாய்கள் இடையே பரவி வரும் புதிய வைரஸ் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது உத்ரபிரதேச மாநிலம் கான்பூரில் புதிய வகை பர்வோ வைரஸ் ஒன்று பரவி வருகிறது, அது பெரும்பாலும் நாய்கள் இடையே பரவி வருகிறது. கொரோனாவின் பிடியில் சிக்கி இன்னும் அதிலிருந்து மீளாத நிலையில் இந்தியாவில் புதிதாக பறவை காய்ச்சல் பல மாநிலங்களில் பரவி வந்திருந்தத நிலையில் தற்போது தான் அந்த காய்ச்சல் பரவ விடாமல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. இதனிடையே கான்பூரில் பரவிவரும் உயிர்கொல்லி பர்வோ […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

“தங்கச் செயின் போட்டு நாயை பிள்ளையாக வளர்த்த தம்பதி”… இறந்த பின்பும் சமாதி கட்டி வழிபாடு..!!

மதுரை பெத்தானியாபுரம் பகுதியில் வீட்டில் வளர்த்த நாய் இறந்ததால் அதற்கு சமாதி கட்டி வழிபாடு நடத்தும் நிகழ்ச்சி நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வாசக ராஜா என்பவர் மதுரை பெத்தானியாபுரம் அகஸ்திய தெருவில் வாழ்ந்து வருகிறார். அவரின் மனைவி விஜயா. வாசக ராஜா மதுரை .மாநகராட்சியில் வேலை பார்த்து வருகிறார் சில ஆண்டுகளுக்கு முன்பு தனது நண்பரின் வீட்டில் பிறந்து ஒரு மாதமே ஆன ஆண் நாய் குட்டி ஒன்றை தன் வீட்டிற்கு எடுத்து வந்துள்ளார். நண்பன் வீட்டிலிருந்து எடுத்து […]

Categories
உலக செய்திகள்

இங்கிலாந்தில் நாயினால் அடுத்த பாதிப்பு… ஒன்றரை வயது குழந்தைக்கு ஏற்பட்ட பரிதாபம்…விமான ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனையில் அனுமதி…!

இங்கிலாந்தில் ஒன்றரை வயது குழந்தையை நாய் கடித்துக் குதறியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இங்கிலாந்தில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு ஒரு இளம்பெண்ணை சொந்த வீட்டு நாய் கடித்து குதறி இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. அதேபோன்று ஒரு சம்பவம் லிவர்பூல் பூங்காவிலும் நடந்துள்ளது. நேற்று மதியம் 1.25 ஒரு குழந்தையின் அலறல் சத்தம் பூங்காவில் கேட்டுள்ளது. சத்தத்தைக் கேட்டு பதறி அடித்து சென்று அக்கம் பக்கத்தில் இருந்த பொதுமக்கள் ஒன்றரை வயது ஆண் குழந்தையை நாய் […]

Categories
தேசிய செய்திகள்

கழிவறையில் 7 மணி நேரம்…. “சிறுத்தையுடன் போராடிய நாய்”… பின்னர் நடந்த சம்பவம்…!!

கர்நாடக மாவட்டத்தில் உள்ள பில்னெலே என்ற கிராமத்தில் நேற்று காலை 7 மணி அளவில் சிறுத்தை ஒன்று நாயை விரட்டி வந்தது. அதனிடமிருந்து தப்பிக்க அந்த நாய் ஒரு வீட்டின் கழிவறைக்குள் புகுந்தது.  பின்னாடியே வந்த சிறுத்தையும் கழிவறைக்குள் சென்றது. பின்னர் கழிவறைக்கு அந்த வீட்டின் உரிமையாளர் கதவுக்கு வெளியே புலியின் வால் இருப்பதை கண்டு பயந்து, அதன் கழிவறையின் கதவை அடைத்துவிட்டு கூச்சல் போட்டனர். தொடர்ந்து வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர். காலை 8:45 மணிக்கு  […]

Categories
உலக செய்திகள்

பனிக்குள் இருந்து எட்டிப்பார்த்த கைகள்… நாயின் சாதுரியமான செயல்… காப்பாற்றப்பட்ட உயிர்கள்…!

சுவிட்சர்லாந்தில் நாய் இரண்டு உயிர்களை காப்பாற்றிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இத்தாலிய எல்லையில் நடந்து சென்று கொண்டிருந்த ஒருவரை நாய் ஒன்று விடாமல் குறைத்து சத்தம் போட்டு கூப்பிட்டுள்ளது. அந்த நாய் கூட்டி சென்ற இடத்தில் பனிக்குள் இருந்து இரண்டு கைகள் வெளியில் நீட்டிக் கொண்டிருப்பதை கண்ட அவர் அதிர்ச்சி அடைந்தார். அதன்பின் அந்த இடத்தில் வேகமாக தோண்டத் தொடங்கினார்.தோண்டிய போது இரண்டு நபர்கள் பனிக்குள் புதைந்து இருப்பதை கண்டு மேலும் அதிர்ச்சி அடைந்தார். அதன்பின்  அவர்கள் பனிக்குள் […]

Categories
உலக செய்திகள்

ஐந்து அறிவு ஜீவனால் காப்பாற்றப்பட்ட 2 உயிர்கள்… இத்தாலியில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்…!!

பனிக்குள் புதைந்தவர்களை மீட்க நாய் உதவிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  தென்மேற்கு சுவிட்சர்லாந்தில் இத்தாலிய எல்லையில்  சிலர் நடந்து சென்று  கொண்டிருந்தனர். அப்போது அவர்களுக்கு நாயொன்று தொடர்ந்து குறைக்கும் சத்தம் கேட்டுள்ளது. அதனால் அவர்கள் நாய் குறைக்குமிடத்தை நோக்கி சென்றுள்ளனர். அப்போது நாய்க்கு அருகில் இரண்டு கைகள் பனிக்குள் இருந்து வெளியே  நீட்டியிருந்ததை கண்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். பின்னர் வேகமாக அந்த இடத்தில் தோண்டிய போது, 2 பேர் அந்த பனிக்குள் புதைந்து இருப்பதை கண்டு […]

Categories
தேசிய செய்திகள்

“ஒரு வாரம் மருத்துவமனை வாசலில் காத்திருந்த நாய்”… எதற்கு தெரியுமா..?

துருக்கியில் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட உரிமையாளரின் வருகைக்காக நாய் 6 நாட்கள் மருத்துவமனை வளாகத்திலேயே காத்திருந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. துருக்கி மாநிலம் வடகிழக்கில் அமைந்திருக்கும் ராப்சன் நகரில் வசித்து வருபவர் சென்டாக். இவர் போன்கக் என்ற  நாயை வளர்த்துவந்தார். இவருக்கு கடந்த 14ஆம் தேதி உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆம்புலன்சுக்கு பின்னாலேயே ஓடிய அந்த நாய் தொடர்ந்து அவர் அனுமதிக்கப்பட்ட வாசலிலேயே காத்திருந்தது. பின்னர் அவருக்கு ஆறு நாட்கள் சிகிச்சை வழங்கப்பட்டது. […]

Categories
உலக செய்திகள்

முதலாளிக்காக மருத்துவமனை வாசலில் காத்துக்கிடந்த நாய்… வைரல் வீடியோ…!!!

துருக்கியில் உடல்நலம் சரியில்லாத தனது உரிமையாளருக்காக ஆறு நாட்கள் மருத்துவமனை வாயிலில் நாய் காத்திருந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. துருக்கி நாட்டில் டிராப்ஸன் நகரில் வசித்து வருபவர் சென்டூர்க். இவர் உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவர் மருத்துவமனைக்குச் செல்லும் போது நாயும் ஆம்புலன்ஸ் பின்னாலேயே ஓடியுள்ளது. இவருக்கு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு ஆறு நாட்கள் வரை அவர் மருத்துவமனையில் இருந்துள்ளார். அந்த 6 நாட்களும் நாய் மருத்துவமனை வாசலிலேயே காத்திருந்துள்ளது. செண்டூர்க்கின் மகள் […]

Categories
தேசிய செய்திகள்

சிகிச்சை நாய்க்கா…? மனுஷங்களுக்கா….? அரசு மருத்துவமனையின் அவலம்…. வெளியான காணொளி…!!

அரசு மருத்துவமனையில் நோயாளிகள் படுக்கையில் நாய் படுத்திருந்த காணொளி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது சமீப நாட்களாக அரசு மருத்துவமனைகளின் நிலை மிகவும் மோசமானதாக மாறி வருகிறது பிணவறையில் வைக்கப்பட்டிருக்கும் சடலத்தை நாய் கடிப்பதும், பிறந்த குழந்தைகளை எலிகள் கடிப்பதும் நடந்துள்ளது. தற்போதும் அதே போன்று அரசு மருத்துவமனையில் நடந்த ஒரு நிகழ்வு குறித்து காணொளி வெளியாகி சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள முராதாபாத் நகரில் அரசு மருத்துவமனை ஒன்று அமைந்துள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

2 ஏக்கர் சொத்துள்ள நாய்… உயில் எழுதிய விவசாயி… அதிர்ச்சி…!!!

மத்திய பிரதேச மாநிலத்தில் தன் வளர்ப்பு நாய்க்கு விவசாயி ஒருவர் இரண்டு ஏக்கர் நிலத்தை உயில் எழுதி வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேச மாநிலத்தில் விவசாயி ஒருவர் நாய் ஒன்றை வளர்த்து வந்துள்ளார். அந்த வளர்ப்பு நாய் மீது அளவு கடந்த பாசம் வைத்ததால் அதன் பெயரில் இரண்டு ஏக்கர் நிலத்தை உயில் எழுதி வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேச மாநிலத்தில் சிந்துவார மாவட்டத்தை சேர்ந்த ஓம்நாராயண் வர்மாவின் மகன் ஊதாரித்தனமாக […]

Categories
தேசிய செய்திகள்

எனது சொத்தில் ஒரு பங்கு “எனது நாய்க்கு சேரும்”… உயில் எழுதி வைத்த விவசாயி… கொந்தளிக்கும் மகன்..!!

விவசாயி ஒருவர் தான் பிரியமாக வளர்த்த வளர்ப்பு நாய்க்கு சொத்தில் ஒரு பகுதியை எழுதி வைத்துள்ள சம்பவம் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேச மாநிலம் சிந்த்வாரா மாவட்டத்தில் உள்ள பதிவாரா கிராமத்தை சேர்ந்தவர் ஓம் நாராயண பெருமாள் இவர் விவசாயி ஆக வேலை பார்த்து வருகிறார். இவர் தனது சொத்துக்கள் அனைத்தையும் மனைவி சம்பா பாய்க்கும், ஜாக்கி என்ற செல்ல நாய்க்கு மட்டுமே சேரும் என எழுதி வைத்துள்ளார். ஹோம் நாராயணனின் உயிலில் எனது மனைவி […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

திடீரென இறந்த நாய்… கவலையில் வாடிய காவலர்… மெழுகு சிலையில் நாய் உருவம்…!!!

போலீஸ்காரர் 8 வருடங்களாக வளர்த்த நாய் உடல்நலம் சரியில்லாமல் இருந்ததால் மனம் உடைந்து அதனை போலவே மெழுகு சிலை அமைத்து பராமரித்து வருகிறார். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள வத்திராயிருப்பு மதுவிலக்கு பிரிவில் ரேணுகாந்த் என்பவர் காவல்துறையில் ஏட்டாக பணியாற்றி வருகிறார். இவர், பிறந்து 40 நாட்கள் ஆன ஜெர்மன் ஷெப்பர்டு என்ற நாய் குட்டியை கடந்த 2012 ஆம் ஆண்டு கொடைக்கானலில் இருந்து வாங்கி இருக்கிறார். அதன்பின் அந்த நாய்க்குட்டிக்கு பவுலி என்னும் பெயரை வைத்து 8 […]

Categories
தேசிய செய்திகள்

காதலுக்கு எதிர்ப்பு… இழுத்து சென்ற உரிமையாளர்… கேரளாவை உலுக்கிய குஞ்சன் – ஜுலி காதல் கதை..!!

கேரளாவில் இரு நாட்களுக்கு முன்பு காரில் நாயை கட்டி இழுத்து சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் பற்றிய தகவலை இச்செய்தியில் பார்ப்போம். இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட நாயின் பெயர் ஜூலி. கடந்த 2017ம் ஆண்டு வெள்ளத்தில் சிக்கிய நாயை யூசப் எடுத்து வந்து வளர்த்தார். அந்த நாய்க்கு ஜூலி என பெயரிட்டு அன்பை பரிமாறி ,சாப்பாடு போட்டு வளர்த்து வந்தார். இந்நிலையில் ஜூலி கடந்த 6 மாதங்களுக்கு முன்பு காணாமல் போனது. கஷ்டப்பட்டு […]

Categories
தேசிய செய்திகள்

உயிருக்குப் போராடிய வாலிபர் “நன்றியுள்ள ஜீவன் என்று நிரூபித்த நாய்”… குவியும் பாராட்டு..!!

மோட்டார் வாகனத்தில் வந்து கொண்டிருந்த இளைஞர் நிலைதடுமாறி குளத்தில் விழுந்து உயிருக்குப் போராடிய போது நாய் ஒன்று அவரை காப்பாற்றியது. வாயில்லா ஜீவனாக சுற்றி திரியும் நாய்கள் நன்றி உணர்வு மிக்கது. உணவளிக்கும் எஜமானரின் கட்டளைக்குக் கீழ்ப் பணிந்து வீட்டுக்கு நல்ல காவலாளியாக இருக்கும். இந்த வகையில் வீட்டில் மட்டுமின்றி தெருநாய்கள் சந்தேகப்படும்படி யாரேனும் வந்தால் விடாமல் குறைத்து வீதியில் உள்ளவர்களை விழிப்படையச் செய்யும். அந்த வகையில் தெருநாய் ஒன்று உயிருக்கு போராடிய ஒருவரின் உயிரை காப்பாற்றியுள்ளது. […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

பெருக்கெடுத்து ஓடிய வெள்ளம்… பரிதவித்த குட்டிகள்… நாயின் பாசப் போராட்டம் வென்றதா..?

எட்டு குட்டிகளை பெற்றெடுத்த நாய் ஒன்று வெள்ளத்தில் இருந்து தனது குட்டிகளை காப்பாற்ற ஒவ்வொன்றாக வாயில் கவ்விக் கொண்டு பாதுகாப்பான இடத்திற்கு தூக்கி சென்றது. வேலூர் புதிய பஸ் நிலையம் அருகே இரு பாலாறு ஆறுகளுக்கு இடையே ஏராளமான நாய்கள் வசித்து வருகின்றனர். புயலால் பெய்த கன மழையால் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. வெள்ளம் வந்தபோது பாலாற்றில் வசித்துவந்த நாய்கள் வேறு இடங்களுக்கு ஓடின. இந்நிலையில் 8 குட்டிகளை பெற்ற நாய் ஒன்று வெள்ளத்தில் இருந்து குட்டிகளை […]

Categories
தேசிய செய்திகள்

viral video: அரசு மருத்துவமனையில் அலட்சியம்… இறந்த சிறுமியின் உடலை நாய் கடித்து செல்லும் அவலம்…!!

உத்திரப் பிரதேசத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் இறந்து போன சிறுமியின் உடலை நாய் கடித்து இழுத்துச் செல்லும் வீடியோ சமூகவலைதளங்களில் பரவி வைரலாகி வருகிறது. உத்தரப் பிரதேச மாநிலம், சாம்பல் மாவட்டத்தில் நேற்று நிகழ்ந்த சாலை விபத்தில் சிறுமி ஒருவர் உயிரிழந்தார். அவரது உடல் அரசு மருத்துவமனையின் படிக்கட்டின் அடியில் ஸ்ட்ரெச்சரில் நிறுத்தப்பட்டிருந்தது. ஊழியர்கள் யாரும் இல்லை. அங்கு வந்த ஒரு தெரு நாய் சிறுமியின் உடலை கடித்தது. இந்த காட்சி அங்கிருந்த ஒரு வீடியோவாக எடுத்து […]

Categories
தேசிய செய்திகள்

அனுஷ்காவின் நாய் விராட்….. கடுமையாக விமர்சித்த காங்கிரஸ் பிரமுகர்…. எழுந்த சர்ச்சை…!!

விராட் கோலியை நாய் என  காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் விமர்சித்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தீபாவளியை முன்னிட்டு இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனான விராட் கோலி அனைவருக்கும் வாழ்த்துக்கூறி ட்விட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் பட்டாசு வெடிக்காமல் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் விதமாக தீபம் ஏற்றி இனிப்பு வழங்கி கொண்டாடும் படி கேட்டுக் கொண்டார். அவரது இந்த பதிவு நெட்டிசன்களிடையே பல கேள்விகளை எழுப்பியது. ஐபிஎல் தொடரில் பட்டாசு வெடித்து வெற்றியைக் கொண்டாடும் போது நாங்கள் மட்டும் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

நாய் கடிதத்ததால்…. 20க்கும் மேற்பட்டவர்கள் காயம்…. அருப்புக்கோட்டையில் பரபரப்பு…!!

20க்கும் மேற்பட்ட நபர்கள் நாய்கள் கடித்ததால் காயமடைந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையிலுள்ள சொக்கலிங்கபுரம் உச்சிசாமி கோவில் தெருவில் கடந்த சில வாரங்களாக நாய்களின் தொல்லை அதிகமாக இருந்துள்ளது. இந்நிலையில்  நேற்று காலை அந்த வழியாக சென்ற 20-க்கும் மேற்பட்டவர்கள் நாய்கள் கடித்ததால் படுகாயம் அடைந்து அருப்புக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். இதில் ஆறு பேருக்கு அதிகமாக கடி பட்டதால் தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மீதமுள்ளவர்கள் தடுப்பூசி போட்டு […]

Categories
தேசிய செய்திகள்

நாய்க்கு பாலியல் கொடுமை…. வாலிபர் செய்த கீழ்த்தரமான செயல்…. கைது செய்த போலீஸ்…!!

பெண் நாயை வாலிபர் பாலியல் வன்புணர்வு செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது மகாராஷ்டிரா மாநிலத்தில் இருக்கும் மும்பையில் அமையப்பெற்றுள்ள ஓம் அறக்கட்டளை எனும் தன்னார்வ தொண்டு நிறுவனத்திற்கு போன் கால் ஒன்று வந்துள்ளது. அதில் பேசிய நபர் மும்பை முலுண்ட் நகரில் வெள்ளை நிற பெண் நாய் ஒன்று அங்குள்ள தொழிலாளி ஒருவரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டிருப்பதாக கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அறக்கட்டளையின் நிர்வாகி பிரிஜ் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றார். அங்கு ரத்தம் கொட்டிய […]

Categories
உலக செய்திகள்

இடிபாடுகளில் சிக்கிய உரிமையாளர்….. தேடி திரிந்த நாயின் செயல்…. கண்கலங்க வைக்கும் புகைப்படம்….!!

நிலநடுக்கத்தில் சிக்கிய உரிமையாளர்களை காப்பாற்ற நாய் உதவி கேட்கும் புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி சோகத்தை ஏற்படுத்துகிறது. துருக்கியின் மேற்கு இஸ்மிர் மாகாணத்தின் கரை பகுதியில் இருந்து பதினேழு கிலோமீட்டர் சுற்றளவிற்கு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கத்தினால் 100க்கும் அதிகமானவர்கள் காயமடைந்திருக்கும் நிலையில் உயிரிழப்புகளின் எண்ணிக்கை பற்றி இதுவரை அதிகாரப்பூர்வமாக தகவல் வெளியாகவில்லை. இந்நிலையில் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. நிலநடுக்கத்தால் இடிபாடுகளில் சிக்கிய உரிமையாளரை நாய் தேடுவது போன்றும் அதன் […]

Categories
பல்சுவை

நாங்கள்லாம் யாரு ? எங்களுக்காவது, கொரோனாவது…. கெத்து காட்டிய நாய்… ஸ்டைலாக வலம் வரும் வீடியோ …!!

சமீபத்தில் இணையதளத்தில் வெளியான காணொளி ஒன்று மிகவும் வைரலாகி வருகின்றது. அந்த காணொளியில் பெண் ஒருவர் தான் வளர்க்கும் செல்லப் பிராணியான நாயை வாக்கிங் அழைத்து செல்கிறார். வாக்கிங்க்கு நாயை கூட்டி செல்வது சாதாரண விஷயம் தான். ஆனால் இந்த நாய் முக கவசம் அணிந்து இருந்தது ஆச்சரியத்திற்குரியது. இந்த காணொளியை பார்த்த பலரும் முக கவசம் முக்கியத்துவம் வாய்ந்தது என்ற விழிப்புணர்வு அருமையான ஒன்று என புகழ்ந்து வருகின்றனர். Dublin never fails pic.twitter.com/KFPTdXiNhE — […]

Categories
தேசிய செய்திகள்

“சொத்து வேணும்” சிறுமியை கொன்று…. நாய்க்கு போட்ட மாமாக்கள்…!!

சொத்துக்காக 15 வயது சிறுமியை கொன்று நாய்க்கு போட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது உத்தரபிரதேச மாநிலத்தில் சேர்ந்த 15 வயது சிறுமி ஒருவர் ஏராளமான சொத்துக்களுக்கு அதிபதியாக இருந்துள்ளார். அந்த சொத்துக்கள் அனைத்தும் அவர் மேஜர் ஆனதும் அவரது கைக்கு செல்ல இருந்தது. இதனால் தற்போது சொத்துக்களை அனுபவித்து வரும் உறவினர்கள் சிறுமியை கொலை செய்துவிட முடிவு செய்தனர். அதன்படி சிறுமியின் தாய் மாமாக்களான லியா லால் மற்றும் பிரிட்ஜ் லால் ஆகிய இருவரும் சேர்ந்து சிறுமியை […]

Categories
தேசிய செய்திகள்

மண்ணில் புதைந்து போன குடும்பம்… “மீண்டும் வருவார்கள்”… நகராமல் காத்திருக்கும் நாய்… நெஞ்சை நொறுக்கும் போட்டோ..!!

மூணாறு நிலச்சரிவில் சிக்கிய தனது குடும்பம் தன்னை வந்து அழைத்துச் செல்லும் என நாயொன்று காத்திருக்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது. கேரள மாநிலத்தில் இருக்கும் இடுக்கி மாவட்டம் மூணாறு அருகே தனியாருக்கு சொந்தமான தேயிலை எஸ்டேட் ஒன்று உள்ளது. அங்கு தமிழகத்தை சேர்ந்த பலர் பணிபுரிந்து வந்தனர். அதனால் அவர்கள் குடும்பத்துடன் அங்கேயே தங்கி இருந்தனர். இந்நிலையில் கேரளாவில் பருவமழை தீவிரமடைந்து தொழிலாளர்கள் தங்கியிருந்த மலைப் பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டு குடியிருப்புகள் முழுவதுமாக சேதமடைந்தது. இதனால் அங்கிருந்த […]

Categories
உலக செய்திகள்

டிவி பார்த்து மெய் மறந்த நாய்… வைரலாகும் வீடியோ… இணையத்தை கலக்குகிறது ….!!

தொலைக்காட்சியை பார்த்து மெய்மறந்து போன நாயின் சுட்டித்தன வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பரவிவருகிறது. நம்மில் பலரும் செல்ல பிராணிகளை  அதிக அக்கறையும் பாசமும் கொண்டு வளர்ப்போம். அவற்றை வளர்க்கும் போது அழகாகவும், புத்திசாலியாகவும் மாற்றுவதற்காக சில பயிற்சிகளை அவற்றிற்கு நாம் கற்றுக்கொடுப்பது உண்டு. அதாவது விளையாட்டு, உணவு உண்ணும் முறை, இவற்றை நாம் சொல்வதை அப்படியே கடைபிக்க கற்றுக்கொடுத்து வளர்ப்போம். வீட்டில் வளர்க்கப்படும் செல்லப்பிராணிகளில் முதன்மையாக இருப்பது நாய்தான். பல நண்பர்கள் உறவினர்களுடன் அன்பாக இருப்பதை […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

துரத்திய நாய்…. இரும்பு கதவில் சிக்கி காட்டெருமை மரணம்….. கொடைக்கானல் அருகே சோகம்…!!

கொடைக்கானல் அருகே இரும்பு கதவின் மேல் பகுதியில் சிக்கி காட்டெருமை உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பகுதியில் பேரிக்காய் சீசன் தொடங்கி விட்டதன் காரணமாக வனப் பகுதியில் இருக்கக்கூடிய காட்டெருமைகள் தோட்டத்திற்குள் புகுந்து பயிர்களை நாசம் செய்தும், அவ்வப்போது குடியிருப்பு வளாகத்தில் சுற்றித்திரிந்தும் வந்தன. இந்நிலையில் எப்போதும் போல் பேரிக்காயை தின்பதற்காக காட்டெருமை ஒன்று தனியாக ஊருக்குள் வந்துள்ளது. எருமையை கண்ட நாய்கள் உடனடியாக குரைக்கத் தொடங்க மிரண்டுபோன காட்டெருமை ஓடியது. […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கொரோனா கவச உடையை கவ்விச்செல்லும் நாய்… பொதுமக்கள் அச்சம்..!!

கொரோனா பாதுகாப்பு கவச உடையை நாய் ஒன்று கடித்து இழுத்துச் சென்ற சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது. கோவை கொடிசியா ‘டி’ அரங்கில் கொரோனா தொற்று நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதற்கு 400 படுக்கை வசதிகளுடன் சிறப்பு வார்டு அமைக்கப்பட்டுள்ளது. இங்கு கொரோனாவால் மிகவும் பாதிக்கப்படாமல் சாதாரண நிலையில் உள்ளவர்களுக்கு மட்டும் சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் கொரோனா தடுப்பு கவச உடையணிந்து கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளித்து வருகின்றார்கள். இவர்கள் உபயோகப்படுத்தப்பட்ட பாதுகாப்பு உடைகள் அங்கிருக்கும் ஒரு பெட்டியில் […]

Categories
உலக செய்திகள்

தாயின்றி தவித்த குருவி குஞ்சுகள்… பாசத்துடன் பராமரிக்கும் நாய்….!!

தாயை இழந்த குருவி குஞ்சுகளை நாயொன்று பாதுகாத்து நட்புடன் பழகி வரும் காணொளி சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது இங்கிலாந்தில் உள்ள நார்போல்ட் என்ற இடத்தில் ஜெடேன் என்பவர் ஐந்து வயதில் ரூபி என்ற லேப்ரடார் வகை நாயை வளர்த்து வருகிறார். அவர் வீட்டு தோட்டத்தில் கூடு கட்டியிருந்த குருவி ஒன்று இறந்துவிடவே அதன் குஞ்சிகள் தாயின்றி தவித்து வந்துள்ளது. அவற்றின் மீது இரக்கம் கொண்ட ஜெடேன் அந்த குருவிக்குஞ்சிகளை அவர் வீட்டினுள் பாதுகாத்து வளர்த்து வருகிறார். […]

Categories
உலக செய்திகள்

செல்லப்பிராணி நாய்க்கு கொரோனா… வளர்ப்பு பிரியர்கள் அதிர்ச்சி..!!

அமெரிக்காவில் மற்றொரு நாய்க்கு கொரோனா உறுதிப்படுத்தப்பட்டது செல்லப்பிராணி வளர்ப்பவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது அமெரிக்காவில் ஜார்ஜியா மாகாணத்தில் ஒரு தம்பதியினருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இதனால் அவர்கள் வீட்டில் வளர்க்கப்பட்டு வந்த ஆறு வயது செல்லப் பிராணியான நாயை சுகாதாரப் பணியாளர்கள் தொடர்ந்து கவனித்து வந்துள்ளனர். திடீரென நாய் உடல்நலம் பாதிக்கப்பட்டதால் அதற்கு பரிசோதனை மேற்கொண்டுள்ளனர். பரிசோதனையின் முடிவில் நாய் தொற்றினால் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. கால்நடை மருத்துவர்கள் நாய்க்கு ஏற்கனவே நரம்பு மண்டலத்தில் […]

Categories
தேசிய செய்திகள்

பாசமாக வளர்த்தவர் மரணம்…. சொல்ல முடியா துயரில் நாய் தற்கொலை…!!

தன்னை பாசமாக வளர்த்தவர் உயிரிழந்ததால் நாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது உத்தர பிரதேச மாநிலம் கான்பூரில் சுகாதாரத்துறை இணை இயக்குநராக பணியாற்றி வந்தவர் டாக்டர் அனிதா ராஜ் சிங். 12 வருடங்களுக்கு முன்பு இவர் தெருவோரம் ஆதரவின்றி இருந்த நாய்க்குட்டியை தனது வீட்டிற்கு அழைத்து எடுத்து வந்து அதற்கு ஜெயா என்ற பெயர் சூட்டி இத்தனை வருடங்களாக பாசமாக வளர்த்து வந்தார். இதனால் அனிதா மீது ஜெயா என்ற நாய்க்கு பாசம் […]

Categories

Tech |