வளர்த்தவர்களை காப்பாற்றுவதற்காக வீட்டுக்குள் நுழைந்த பாம்புவிடம் போராடி நாய் உயிரை விட்டுள்ளது. தேனி மாவட்டத்திலுள்ள போடி ராமச்சந்திரா நகரில் வசிக்கும் அரசு மகளிர் கலைக் கல்லூரியில் பேராசிரியராக பணிபுரியும் லட்சுமணன் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றும் ஈஸ்வரி தம்பதியினர் சென்ற பதிமூன்று வருடங்களாக ஜாக்கி என்ற நாயை வீட்டில் வளர்த்து வருகின்றார்கள். இவர்கள் நாயே வீட்டின் முன்பக்கம் உள்ள அறையில் கட்டி வைப்பது வழக்கம். இந்நிலையில் இன்று அதிகாலை 05.30 மணி அளவில் […]
