மனிதாபிமானம் உள்ள சிலர் இந்த மழைக்காலத்தில் நாய்களுக்கும் தங்கள் வீட்டில் தங்க இடம் கொடுத்துள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவடைந்து நிவர் புயலாக மாறி கரையை கடந்தது. இதனால் தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் கனமழை பெய்து வந்தது. மேலும் அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுத்து வந்தது. இந்நிலையில் மழை காரணமாக தங்கும் இடம் இல்லாமல் தெருவிலும், சாலையோரங்களிலும் இருந்த நாய்களுக்கு சென்னை வாசிகள் தங்கள் வீடுகளில் […]
