நாயை கவ்விய சிறுத்தையை விவசாயிகள் வனப்பகுதிக்குள் விரட்டினர். ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பகுதியில் சுமதி என்பவர் வசித்து வருகின்றார். இந்நிலையில் இவர் தனக்கு சொந்தமான இரண்டு ஏக்கர் நிலத்தில் கால்நடைகளுக்கான தீவன புல் வளர்த்து வருகின்றார். மேலும் இவரது வீடும் தோட்டமும் வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ளதால் வனவிலங்குகளின் தொல்லை வராமல் இருப்பதற்காக சுமதி மூன்று நாய்களை வளர்த்து வந்துள்ளார். இதனையடுத்து சுமதி இரவு தூங்கிக் கொண்டிருந்த போது நாய்கள் குரைக்கும் சத்தம் அதிகமாக கேட்டுள்ளது. அதன் பின் […]
