பெண் ஒருவர் தனது கணவரை நாயாக மாற்றி நடைப்பயிற்சிக்கு அழைத்து சென்றுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் கோரதாணடவமாடி வருகின்றது. இந்நிலையில் கனடாவின் கியூபெக் நகரில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதையடுத்து இரவு 8 மணி முதல் அதிகாலை 5 மணி வரை வீட்டை விட்டு யாரும் வெளியே வரக்கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அத்தியாவசிய பணியாளர்கள் மற்றும் செல்லப்பிராணிகளை அழைத்துச் செல்வபவர்களுக்கு இந்த விதிமுறைகளில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. […]
