சூப்பர் மார்க்கெட்டிற்கு பொருட்கள் விநியோகம் செய்ததில் ரூ.26 3/4 லட்சம் மோசடி செய்தது குறித்து விநியோகஸ்தர்கள் புகார் மனு அளித்துள்ளனர். நாமக்கல் மாவட்ட துணை போலீஸ் சூப்பிரண்டு சுரேஷிடம் வினியோகஸ்தர்கள் நலச்சங்கத்தினர் புகார் மனு கொடுத்துள்ளனர். அந்த மனுவில், நாமக்கல் மேட்டுத்தெருவில் இயங்கி வரும் எங்களது சங்கத்தில் சங்க உறுப்பினர்கள் அனைவரும் நாமக்கல்லில் உள்ள மளிகை கடைகள், மருந்து கடைகள் மற்றும் சூப்பர் மார்க்கெட்டுகளுக்கு பொருட்களை வினியோகம் செய்யும் தொழில் செய்து வருகிறோம். இந்நிலையில் நாமக்கல் – […]
