நாமக்கல் மாவட்டத்தில் புதுமண தம்பதிகள் ஆடிப்பெருக்கு கொண்டாட சென்றபோது காவிரி ஆற்றில் மூழ்கி புது மாப்பிளை உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் ஜோடர்பாளையம் ஏரகாடு தோட்டம் பகுதியில் தீபக்குமார்(30) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கரூர் மாவட்டத்தில் ஒரு காகித அலையில் ஒப்பந்த பணியாளராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த ஒரு மாதம் முன்பு தீபக்கிற்கும் மகிமா(25) என்ற பெண்ணுக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது. இதனையடுத்து புதுமண தம்பதிகள் ஆடிப்பெருக்கை கொண்டாடுவதற்காக வீட்டிற்கு […]
