சட்ட விரோதமாக மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்த 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டத்தில் சட்ட விரோதமாக மதுவிற்பனை செய்வதை தடுக்க திருச்செங்கோடு நகர காவல்துறையினர் அப்பகுதியில் உள்ள பேருந்து நிலையம், காய்கறி மார்க்கெட் உள்ளிட்ட இடங்களில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்துள்ளனர். அப்போது திருச்செங்கோடு பழைய பேருந்து நிலையம் அருகே 2 பேர் மது விற்பனை செய்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அவர்கள் செங்கோடம்பாளையம் பகுதியில் வசிக்கும் கார்த்திக் மற்றும் […]
