இன்று நாடு முழுவதும் பெருமைமிக்க மாசி மாத மஹாசிவராத்திரி கொடாடப்படுகிறது. இந்த சிவராத்திரி வெள்ளிக்கிழமையில் வருவது விசேஷத்திலும் விசேஷம். இன்று விரதம் கடைப்பிடித்து, இரவு முழுவதும் சிவ வழிபாட்டில் கலந்து கொண்டால், புண்ணியத்தின் மேல் புண்ணியம் சேரும் என்பது ஐதிகம். இன்று முழுவதும் சிவனுக்கு உபவாசம் இருந்து, சிவபுராணம் படித்து, நமசிவாய மந்திரத்தை உச்சரித்தபடி இறைவழிபாட்டில் ஈடுபடவேண்டும். எல்லா சிவாலயங்களிலும் மஹாசிவராத்திரியன்று, நான்கு கால பூஜை சிறப்பாக நடைபெறும். நான்கு ஜாமம் என்பது மாலை 6 மணி […]
