தனுஷ் நடிப்பில் செல்வ ராகவன் இயக்கத்தில் வெளியாகிய படம் “நானே வருவேன்”. கலைப்புலி எஸ்.தாணு தயாரித்து இருந்த இந்த படத்தை யுவன் ஷங்கர்ராஜா இசையமைத்திருந்தார். இப்படம் வெளிவந்த முதல் நாளிலிருந்து கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது. பொன்னியின் செல்வன் திரைப்படம் வெளிவருவதற்கு ஒரு நாள் முன்பாகவே நானே வருவேன் வெளியாகியது. இதுவே இந்த படத்தின் வசூலுக்கு சற்று பின்னடைவாக அமைந்திருக்கிறது. இந்த சூழ்நிலையில் நானே வருவேன் திரைப்படம் இதுவரையிலும் உலகளவில் ரூபாய் 35கோடி வரையிலும் வசூல்செய்துள்ளது.
