திருச்சி மாவட்டத்தில் 18 வயது இளைஞர் சுடப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். திருச்சி மாவட்டத்தில் மணப்பாறையில் உள்ள தாதகவுண்டம்பட்டியில் பாலசுப்பிரமணியன்(18) என்பவர் வசித்து வந்தார். இவர் இருசக்கர பழுதுபார்க்கும் தொழிலை செய்து வருகிறார். இவரின் தந்தை அழகர். இந்நிலையில் பாலசுப்பிரமணியனுக்கும் தந்தை அழகருக்கு நேற்று இரவு மது போதையில் தகராறு ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது. இதனால் இரவு 9 மணிக்கு வீட்டில் அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த நாட்டு துப்பாக்கியை பாலசுப்ரமணி எடுத்துச் சென்றுள்ளார். இந்நிலையில் பாலசுப்பிரமணியன் தாடைப் பகுதியில் சுடப்பட்ட […]
