ராமேஸ்வரத்தில் கரையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 2 நாட்டுப்படகுகள் தீடிரென தீப்பிடித்து எரித்துள்ளது. கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு போடப்பட்டுள்ள நிலையில் மீன் பிடிக்க கடலுக்கு செல்வது மிகவும் குறைந்துள்ளது. இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் பகுதியில் மீன்பிடிக்க கடலுக்கு செல்லாததால் படகுகள் அனைத்தும் பாம்பன் வடக்கு மற்றும் தெற்கு கரையோரத்தில் நங்கூரமிட்டு நிறுத்து வைக்கப்பட்டுள்ளன. இதனையடுத்து அப்பகுதியில் உள்ள பெனிட்டோ, போஸ்கோ ஆகிய 2 பேருக்கு சொந்தமான நாட்டுப்படகுகள் கரையோரம் நிறுத்தியிருந்த நிலையில் தீடிரென தீப்பிடித்து எரித்துள்ளது. […]
