திண்டுக்கல் அருகே சட்டவிரோதமாக நாட்டுத் துப்பாக்கிகள் தயாரித்து விற்பனையில் ஈடுபட்ட தொழிலாளியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே பழனிபட்டியில் சின்னு என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு சொந்தமாக தோட்டம் ஒன்று உள்ளது. அந்த தோட்டத்தில் சட்டவிரோதமாக நாட்டு துப்பாக்கிகள் தயாரித்து விற்பனை செய்யப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் அளிக்கப்பட்டது. அந்த தகவலின் பேரில் தோட்டத்திற்கு சென்ற மற்றும் காவல்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது […]
