76 நாட்களுக்கு பிறகு ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டதால் வூஹான் நகரில் இருந்த மக்கள் தங்கள் மாகாணங்களுக்கு இடம்பெயர்ந்து வருகின்றனர். உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் 14 லட்சத்து 23 ஆயிரத்து 738 பேருக்கு பரவி 10 லட்சத்து 40 ஆயிரத்து 252 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதில் 47 ஆயிரத்து 911 பேரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. இந்த வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களில் 3 லட்சத்து 1628 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இந்த […]
