பல வங்கிகளில் கடன் பெற்று செலுத்தாமல் இங்கிலாந்துக்கு தப்பிச் சென்ற விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு நாடு கடத்தும் பணிக்கு சாதகமான பதில் வந்துள்ளதாக இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் தெரிவித்துள்ளார். இந்தியாவைச் சேர்ந்த முன்னணி தொழிலதிபர்களில் ஒருவர் விஜய் மல்லையா. இவர் பல வங்கிகளில் கடன் வாங்கிவிட்டு இங்கிலாந்துக்கு தப்பிச் சென்று விட்டார். இவரின் பெயரில் சுமார் 9 ஆயிரம் கோடி கடன் தொகை உள்ளது. இதனால் (CBI) குற்றப்பிரிவு துறை மற்றும் அமலாக்கத்துறை விஜய் மல்லையா மீது […]
