ஜப்பான் நாட்டில் சுட்டு கொலை செய்யப்பட்ட முன்னாள் பிரதமரின் கட்சி, நாடாளுமன்ற மேலவை தேர்தலில் வெற்றி அடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. ஜப்பான் நாட்டில் நாடாளுமன்ற மேலவை தேர்தலை முன்னிட்டு பிரச்சாரம் மேற்கொண்டிருந்த முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே ஒரு நபரால் திடீரென்று துப்பாக்கியால் சுட்டு கொலை செய்யப்பட்டார். இதனைத்தொடர்ந்து அவருக்கு அனுதாபங்கள் அதிகரித்தது. இந்நிலையில் தேர்தலில் மொத்தமாக இருந்த 248 இடங்களில் அவரின் கட்சி அதிகப்படியான இடங்களை கைப்பற்றி வெற்றி பெற்றதாக கூறப்பட்டிருக்கிறது. தற்போது பிரதமரான கிஷிடோ […]
