பிரிட்டன் மகாராணி எலிசபெத் கலந்துகொள்ளும் நாடாளுமன்ற உரை நிகழ்ச்சியில் பல எம்.பிகளுக்கு தடை விதிக்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளது. பிரிட்டன் நாடாளுமன்றத்தில் வருடாந்திர உரை நிகழ்ச்சியில் மகாராணி எலிசபெத் கலந்துகொள்வது வழக்கம். இந்நிலையில் இந்த ஆண்டு மே 17-ம் தேதி பிரித்தானிய நாடாளுமன்றத்தில் மகாராணியாரின் வருடாந்திர உரை நடத்தும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியின்போது மகாராணி நாடாளுமன்றத்துக்கு குதிரை வண்டியில் வருவது வழக்கம். மேலும் அடுத்த 12 மாதங்களில் முன்மொழியப்பட்ட சட்டங்களை மகாராணி எலிசபெத் வகுப்பார். […]
