இந்திய ரயில்வேயின் உணவு வழங்கல் பிரிவான ஐ.ஆர்.சி.டி.சி., ஆன்லைனில் பயணிகளுக்கான டிக்கெட் முன் பதிவு வசதியை அளிக்கிறது. ஐ.ஆர்.சி.டி.சி. பயனர்களின் எண்ணிக்கை 10 கோடிக்கு மேல் ஆகும். அவர்களில் 7.5 கோடி பேர் இதன் இணையதளத்தை தொடர்ந்து பயன்படுத்துபவர்கள் ஆவர். இந்த நிலையில் தங்களது பயணிகள் மற்றும் சரக்கு வாடிக்கையாளர் விபரங்களை பணமாக்குவதற்கு ஆலோசகருக்கான டெண்டரை ஐ.ஆர்.சி.டி.சி. வெளியிட்டு இருக்கிறது. அதன் வாயிலாக ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் ஈட்டவும் திட்டமிட்டு உள்ளதாக கூறப்படுகிறது. இந்த சூழ்நிலையில் […]
