பொதுமக்கள் நாடாளுமன்றத்திற்குள் நுழைந்து போராட்டம் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈராக் நாட்டின் தலைநகர் பாக்தாத்தில் நாடாளுமன்றம் அமைந்துள்ளது. இந்த நாடாளுமன்றத் திற்குள் திடீரென ஏராளமான மக்கள் நுழைந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இங்கு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் சியா தலைவர் முக்-தாதா அல் சதரின் ஆதரவாளர்கள் ஆவார்கள். இவர்கள் பிரதமராக பதவி ஏற்க போகும் முகமது அல் சூடானியை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஏனெனில் பிரதமர் வேட்பாளராக இருக்கும் முகமதுக்கு ஈரான் மிகவும் நெருக்கமாக செயல் படுவதாக […]
