திண்டுக்கல் உதவி ஆட்சியர் அலுவலகத்தில் நாடக கலைஞர்கள் கலை நிகழ்ச்சிகளுக்கு அனுமதி வழங்கக்கோரி மனு கொடுத்தனர். திண்டுக்கல் மாவட்டத்தில் நேற்று முன்தினம் பேருந்து நிலைய ரவுண்டானா பகுதியில் பழனி தாலுகா பகுதியை சேர்ந்த நாடக கலைஞர்கள் 50-க்கும் மேற்பட்டோர் திரண்டனர். அப்போது அவர்கள் காளியம்மன், விநாயகர், கருப்பசாமி ஆகிய உள்ளிட்ட தெய்வங்களின் வேடம் அணிந்து இருந்தனர். மேளதாளம் முழங்க அங்கிருந்து ஊர்வலமாக சென்று உதவி ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு ஒன்றை கொடுத்தனர். அந்த மனுவில் 600-க்கும் […]
