ராஜஸ்தான் ஜெய்ப்பூர் பகுதியில் வசித்து வருபவர் மகேஷ் சந்த். இவருடைய மனைவி ஷாலு. சென்ற அக்டோபர் மாதம் 5-ஆம் தேதி ஷாலு தன் உறவினர் ராஜூவுடன் கோயிலுக்கு மோட்டார்சைக்கிளில் சென்றார். இந்நிலையில் கார் ஒன்று மோட்டார்சைக்கிள் மீது மோதியது. இதனால் இருவரும் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். இதனை காவல்துறையினர் சாலை விபத்தாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இதனிடையில் ஷாலு மரணம் அடைந்தால் அவரது பெயரில் இருந்த இன்சூரன்ஸ் பணமான ரூபாய்.1.90 கோடியை மகேஷ் சந்த் பெற்றார். […]
