கால் பந்து வீராங்கனை பிரியா இறப்பு ஈடுசெய்ய முடியாதது என கூறியிருக்கும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன், இவ்விவகாரத்தில் கவனக்குறைவாக நடந்து கொண்டதாக புகாரின் படி 2 மருத்துவர்கள் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாகக் தெரிவித்தார். சென்னை வியாசா்பாடியை சோ்ந்த ரவிக்குமாரின் மகள் பிரியா (17). இவர் சென்னை ராணிமேரி கல்லூரியில் விளையாட்டுப்பிரிவில் பயின்று வந்தார். அத்துடன் இவர் மாநில கால் பந்து விளையாட்டில் பங்கேற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. பிரியா இறப்பு பற்றி அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது […]
