செய்தியாளர்களிடம் பேசிய நாஞ்சில் சம்பத், அண்ணா திமுகவில் நடப்பது எதிர்பார்த்தது தான். அண்ணா திமுக என்ற பேரியக்கத்தை, ஒன்றை கோடி தொண்டர்கள் இருந்த இயக்கத்தை, கோடிக்கணக்கான விளிம்பு நிலை மக்களின் நம்பிக்கை பெற்ற இயக்கத்தை எடப்பாடி பழனிச்சாமி இன்றைக்கு குறைந்த விலைக்கு குத்தகைக்கு எடுத்து இருக்கிறார். அவர் குத்தகைக்கு எடுப்பதற்கு டெல்லியில் இருக்கின்ற எஜமானர்கள் அனுமதித்திருக்கிறார்கள். ஏற்கனவே கொம்பு சீவி விட்ட பன்னீர்செல்வம் டெல்லி சென்றபோது, ஜனாதிபதி வேட்பாளரை வேட்புமனு தாக்கல் செய்கிற இடத்தில் முக்கியத்துவம் கொடுத்துவிட்டு, […]
