ஜேம்ஸ் வெப் தொலைநோக்கியின் மீது விண்கற்கள் மோதியதாக நாசா தெரிவித்துள்ளது. நமது பிரபஞ்சம் சுமார் 1,400 கோடி ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ‘பிக் பேங்க்'(Big Bang) எனப்படும் பெருவெடிப்பு மூலம் தோன்றியதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இந்த பிரபஞ்சம் தோன்றிய காலத்தில் நடந்த நிகழ்வுகள் குறித்தும், நட்சத்திரக் கூட்டங்கள், கருந்துளைகள் உள்ளிட்டவை குறித்தும் ஆராய்வதற்காக ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கி ஏவப்பட்டுள்ளது. ஆனால் விண்வெளி ஆய்வில் புரட்சிகரமான முன்னேற்றத்தைக் கொண்டு வந்த ஹபிள் விண்வெளி தொலைநோக்கியின் ஆயுள் குறைவாக […]
