அமெரிக்க நாட்டின் விண்வெளி மையமான நாசா, ஐரோப்பிய மற்றும் கனடா விண்வெளி மையங்கள் போன்றவை இணைந்து விண்வெளியை ஆய்வு மேற்கோள்வதற்காக ஜேம்ஸ்வெப் தொலைநோக்கியை உருவாக்கியுள்ளது. இத்தொலைநோக்கி சூரியனை சுற்றிய புவிவட்டப் பாதையிலிருந்து 15 லட்சம் கிலோ மீட்டர் தொலைவில் நிலைநிறுத்தப்பட்டு இருக்கிறது. இந்த ஜேம்ஸ்வெப் தொலைநோக்கி பிரபஞ்சத்தின் அரிய புகைப்படங்களை பூமிக்கு அனுப்பி வைத்துள்ளது. இப்புகைப்படங்களை சமீபத்தில் நாசா வெளியிட்டது. பிரபஞ்சத்தின் தோற்றம் தொடர்பான ரகசியங்களை அறிவதற்கான தேடலில், இந்த புகைப்படங்கள் ஒரு மிகப்பெரிய மைல்கல்லாக பார்க்கப்படுகிறது. […]
