கஜா புயலுக்கு பின் நாகலிங்க மரங்கள் தற்போது மீண்டும் பூத்துக்குலுங்கத் தொடங்கி நறுமணம் வீசி வருகிறது. நாகை மாவட்டம் வேளாங்கண்ணியை அடுத்துள்ள ஆய்மழை கிராமத்தில் ஏராளமான நாகலிங்க மரங்கள் காணப்பட்டன. இவையனைத்தும் 2018ஆம் ஆண்டு வீசிய கஜா புயலின் கோர தாக்குதலில் சேதமடைந்தன. அதிலிருந்து மீண்ட 5 மரங்கள் 2 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது பூத்துக் குலுங்கத் தொடங்கியுள்ளன. கோயில்களில் மட்டுமே இந்த அரியவகை நாகலிங்கப்பூ காணப்படும்.. தற்போது இந்த மரங்கள் பூத்துக் குலுங்குவதால் அப்பகுதி முழுவதும் நறுமணம் […]
