நாகர்கோவில் அருகே வேறு சாதி பெண்ணை காதலித்த இளைஞரை பெண்ணின் உறவினர்கள் கொலை செய்ததாக கூறி சடலத்தை பெற்றுக்கொள்ள உறவினர்கள் மறுப்பு தெரிவித்து வரும் நிலையில், இந்நிகழ்விற்கு நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார். கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே தோவாளை பகுதியை சேர்ந்தவர் சுரேஷ்குமார். இவரும் காட்டுப் புதூர் பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவரும் கடந்த 8 ஆண்டுகளாக காதலித்து வந்ததாக தெரிகிறது. இந்த காதலுக்கு பெண்ணின் பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். […]
