ஆடி மாதத்தை முன்னிட்டு நாகராஜா கோவிலில் பக்தர்கள் திரண்டு வந்து சுவாமி தரிசனம் செய்தனர். தமிழகத்தில் கொரோனா படிப்படியாக குறைந்து வரும் நிலையில் அரசு சில தளர்வுகளை அறிவித்து வருகின்றது. அதன்படி கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கோவில்கள் திறக்கப்பட்டு பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். இந்நிலையில் ஆடிமாதம் பிறந்ததை முன்னிட்டு மாவட்டத்தில் உள்ள அம்மன் கோவில்கள் உட்பட பல்வேறு கோவில்களில் பக்தர்கள் பெரும்பாலானோர் சென்று சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். எனவே நேற்று (ஞாயிற்றுக்கிழமை) அன்று […]
