மாவட்டத்தின் தலைநகரை தன்னகத்தே கொண்டது நாகப்பட்டினம் சட்டமன்ற தொகுதி. இஸ்லாமியர்களின் மிக முக்கிய புனித தலமான நாகூர் இங்கு அமைந்துள்ளது. விவசாயம் மற்றும் மீன்பிடி தொழிலை பிரதானமாக இங்கு உள்ளவர்கள் நம்பியுள்ளனர். சோழர்கள் காலத்திலேயே புகழ் துறைமுக நகரமாக விளங்கியது நாகப்பட்டினம். நாகப்பட்டினம் தொகுதியில் திமுக மற்றும் காங்கிரஸ் 2 முறை வென்றுள்ளனர். அதிமுக 4 முறை தொகுதியை கைப்பற்றியுள்ளது. இந்திய கம்யூனிஸ்ட் 1 முறையும், அதிக அளவாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 6 முறையும் வெற்றி […]
