திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடக்க உள்ள நவராத்திரி பிரம்மோற்சவ விழாவில் தினமும் 20 ஆயிரம் முதல் 25 ஆயிரம் பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருகிற 16ம் தேதியிலிருந்து 24 ஆம் தேதி வரையில் ஒன்பது நாட்கள் நவராத்திரி பிரம்மோற்சவ விழா நடக்க இருக்கிறது. மூன்று வருடங்களுக்கு ஒரு முறை நடக்கும் அந்த பிரம்மோற்சவ விழாவில்,கோவிலின் நான்கு மாட வீதியில் ஊர்வலம் நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. வாகன ஊர்வலத்தில் […]
