திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தொடங்கும் நவராத்திரி பிரம்மோற்சவ விழாவில் வாகன சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஒவ்வொரு வருடமும் நவராத்திரி பிரம்மோற்சவ விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருவது வழக்கம். இந்த ஆண்டுக்கான நவராத்திரி பிரம்மோற்சவ விழா நாளை மறுநாள் தொடங்க உள்ளது. 24 ஆம் தேதி வரை நடைபெறும் விழா நாட்களில், தினம் தோறும் சிறப்பு அபிஷேகம், அலங்காரம், திருமஞ்சனம் ஆகியவை நடைபெற உள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கோவில் […]
