Categories
உலக செய்திகள்

“இரவில் திடீரென தோன்றும் உருவம்”…. உடலில் கண்ட இடத்தில் தொட்டு….! சிசிடிவி காட்சியை பார்த்து மிரண்டு போன பெண்….!!!!

சிங்கப்பூர் நீதிமன்றத்தில் இளம்பெண் ஒருவர் தனக்கு நேர்ந்த கொடுமையை கூறி வேதனை அடைந்தார். சிங்கப்பூரை சேர்ந்த இளம் பெண் ஒருவர் தனது காதலனுடன் சிங்கப்பூரில் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு வாரியத்தின் கீழ் உள்ள வீட்டில் வாடகைக்கு வசித்து வருகிறார். அந்த வீட்டின் உரிமையாளர் அந்த காதல் ஜோடியிடம் இந்த வீடுகளில் பேய்கள் இருப்பதாகவும் தாங்கள் அடிக்கடி தாய்லாந்துக்கு சென்று மாந்திரீகம் செய்து வருவதாக கூறியுள்ளார். இதனால் காதல் ஜோடிக்கு சிறிது பதட்டம் ஏற்பட்டது. மேலும் இவர்கள் […]

Categories
தேசிய செய்திகள்

18 வயது கல்லூரி மாணவிக்கு…. நள்ளிரவில் நடந்த சம்பவம்…. குஜராத்தில் பரபரப்பு….!!!!

குஜராத் மாநிலத்தில் உள்ள சல்தான் பகுதியில் ரியா (வயது 18) என்ற கல்லூரி மாணவி வசித்து வருகிறார். இவர் தனது தேர்வுக்காக இரவில் தூங்காமல் படித்து கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சம்பவத்தன்று வீட்டின் பின்புறம் நள்ளிரவு 1.30 மணியளவில் ஏதோ ஒரு சத்தம் கேட்டுள்ளது. மேலும் அப்பகுதியில் மின்தடை ஏற்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக அந்த சத்தம் குறித்து ரியா பெரிய அளவில் கவனத்தில் எடுத்துக்கொள்ளவில்லை. இந்த நிலையில் மர்மநபர் ஒருவர் கையில் கத்தியுடன் ரியாவின் […]

Categories
தேசிய செய்திகள்

12 வருஷத்துக்கு ஒருமுறை….. பூக்கும் பிரம்ம கமலம்…. வீட்டில் பூத்ததால் மகிழ்ச்சி…!!!!

ஜஸ்வந்த் சிங் என்பவரது வீட்டு மூலிகை பூங்காவில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே பூக்கும் அரிதான பிரம்ம கமலம் பூ பூத்துள்ளது. சென்னை முகப்பேரில் வசிக்கும் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த ஜஸ்வந்த் சிங் (வயது59). இவர் தமிழ் மொழியின் மீது கொண்ட பற்றினால் தமிழ் மொழியை எழுதப் படிக்க கற்றுக் கொண்டார். அதன்பின் இயற்கையோடு ஒன்றித்து வாழ வேண்டும் என்ற விருப்பத்தில் வீட்டு வளாகத்தில் செடி,கொடிகள் அரிய மூலிகைகள் கொண்ட ஒரு பூங்காவை ஏற்படுத்தினார். இவரது […]

Categories
மாநில செய்திகள்

JUSTIN : நள்ளிரவு பிரார்த்தனைகளுக்கு தடையில்லை…. காவல் ஆணையர் விளக்கம்….!!!

நள்ளிரவு பிரார்த்தனைகளுக்கு தடை கிடையாது என்று சென்னை மாநகராட்சி காவல் ஆணையர் விளக்கமளித்துள்ளார். நாளை இரவு முதல் புத்தாண்டு கொண்டாட்டங்கள் ஆரம்பமாகவுள்ளது. அடுத்த ஆண்டு பிறக்கும் நேரத்தில் அனைவரும் கோவில்கள், தேவாலயங்கள் உள்ளிட்ட வழிபாட்டுத் தலங்களுக்குச் சென்று வழிபடுவது வழக்கம். இதற்கு எந்த தடையும் கிடையாது என்று சென்னை மாநகர் காவல் ஆணையர் தெரிவித்துள்ளார். ஆங்கில புத்தாண்டு பிரார்த்தனைகளுக்கு எந்தவித தடையும் ஏற்படாத வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் விளக்கமளித்துள்ளார். கடைகள் உணவுகள் மட்டுமே 11 மணிக்குமேல் […]

Categories
உலக செய்திகள்

“நள்ளிரவில் குடியிருப்பின் வாசலில் கிடந்த சிறுமியின் சடலம்!”.. கைது செய்யப்பட்ட 15 வயது சிறுவன்.. கனடாவில் பரபரப்பு..!!

கனடாவில் 16 வயது சிறுமி கொல்லப்பட்ட வழக்கில் 15 வயது சிறுவனை காவல்துறையினர் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கனடாவில் கடந்த 1-ஆம் தேதி அன்று Regina என்னும் நகரிலிருந்து நள்ளிரவு 2 மணிக்கு காவல்துறையினருக்கு அழைப்பு வந்திருக்கிறது. அதனைத்தொடர்ந்து  காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்ற போது, அப்பகுதியில் உள்ள ஒரு குடியிருப்பின் வாசலில் 16 வயது சிறுமியின் சடலம் கிடந்துள்ளது. அச்சிறுமியின் பெயர் Kadee Burns என்று தெரியவந்திருக்கிறது. தற்போது, காவல்துறையினர் இது தொடர்பில் […]

Categories
தேசிய செய்திகள்

மராட்டிய மாநிலத்தில் நள்ளிரவு முதல் அமலுக்கு வந்த பேருந்து கட்டண உயர்வு… அதிர்ச்சியில் பொதுமக்கள்…!!!

மராட்டிய மாநிலத்தில் நள்ளிரவில் திடீரென்று பஸ் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. மராட்டிய மாநில சாலை போக்குவரத்து கழகம் சார்பில் அரசு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. அந்த மாநிலத்தில் மொத்தம் 16 ஆயிரம் அரசு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதில் 95 ஆயிரம் பேர் வேலை பார்த்து வருகின்றனர் இந்த பஸ்கள் மும்பையிலிருந்து புனே உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கு இயக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் நேற்று நள்ளிரவு முதல் திடீரென்று அனைத்து வகை பஸ்களின் கட்டணத்தையும் அரசு உயர்த்தியுள்ளது. இதுகுறித்து போக்குவரத்து […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில்…. இடியுடன் கூடிய கனமழை….!!!!

தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்துக் கொண்டிருக்கும் சூழலில், மக்களுக்கு சற்று குளிர்ச்சியூட்டும் விதமாக ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. அதுமட்டுமல்லாமல் ஜூன் மூன்றாம் தேதி முதல் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளது. அதனால் தமிழகத்தின் பல மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் வெப்பச்சலனம் காரணமாக சென்னையில் இடியுடன் கனமழை பெய்தது. நேற்று மாலை ஒரு மணி நேரத்திற்கும் மேலாக மழை பெய்த நிலையில் நள்ளிரவில் மீண்டும் மழை கொட்டி தீர்த்தது. […]

Categories
உலக செய்திகள்

“அடப்பாவிகளா..!” நள்ளிரவில் பேய் வேட்டையா..? 60 மைல் கடந்து வந்தவர்கள்.. போலீசிடம் சிக்கிய வேடிக்கை சம்பவம்..!!

பிரிட்டனில் நள்ளிரவில் பேய் வேட்டைக்காக வந்த 4 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டு வாகனம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.  பிரிட்டனில் மார்ச் 5ஆம் தேதியன்று நள்ளிரவில் “Team 3 Town Hill” என்ற காவல் துறையினர் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது காரில் நான்கு பேர் இருந்துள்ளனர். இதனை கவனித்த காவல்துறையினர் அவர்களை விசாரித்துள்ளனர். அப்போது நாங்கள் “Ghost Hunters” என்று அவர்கள் தெரிவித்துள்ளனர். https://twitter.com/SWPSwansea/status/1367656104906420231 மேலும் Cwmbran என்ற நகரத்தில் இருந்து 60 மைல் தூரத்தில் பயணம் செய்து பேய்கள் […]

Categories
உலக செய்திகள்

இன்னும் நூறே வினாடிகள் தான்… உலகத்தை நெருங்கும் பேராபத்து… டூம்ஸ்டே கடிகாரத்தின் அறிகுறி..!!

உலகின் ஆபத்தை கணிக்க உருவாக்கப்பட்ட டூம்ஸ்டே கடிகாரம் நள்ளிரவை நெருங்க 100 வினாடிகளே இருப்பதால் அச்சம் ஏற்பட்டுள்ளது.  உலகில் சிறிய அளவிலான மாற்றங்களும் அச்சுறுத்தல்களும் ஏற்பட்டு கொண்டிருப்பது வழக்கம். இதன் படி இந்த 2021 ஆம் வருடமானது மிகவும் ஆபத்தான வருடமாக இருக்கும் என்று பாபா வங்கா ஏற்கனவே கணித்திருந்தார். இந்நிலையில் மனித இனத்தின் ஆபத்தை குறிப்பதற்காக கடந்த 1947 ஆம் வருடத்தில் அணு விஞ்ஞானிகள் இணைந்த Bulletin of the Atoic Scientists என்ற அமைப்பு […]

Categories
உலக செய்திகள்

நள்ளிரவில் வைரலான தகவல்… இரவு உடையுடன் சென்ற மக்கள்…மருத்துவமனையில் காத்திருந்த இன்ப அதிர்ச்சி….!

வாஷிங்டன்னில் பொதுமக்கள் இரவு உடையுடன் மருத்துவமனைக்கு வந்து தடுப்பூசி போட்டுக் கொண்டனர். வாஷிங்டன் மாகாணத்தில் உள்ள சீட்டில் நகரில் தடுப்பூசி சேமிக்கப்பட்டு வைத்திருந்த ஃப்ரீசர் திடீரென பழுதடைந்தது. அதில் 1650 டோஸ் மாடெர்னா தடுப்பூசி இருந்தது. ஃப்ரீசர் பழுதானதால் தடுப்பூசியை உபயோகிக்காமல் விட்டால் அது அதிகாலை 3:30 மணிக்குள் வீணாகும் என்ற நிலைமை ஏற்பட்டது. அதன்பின் இது குறித்த தகவலை உடனடியாக மருத்துவமனைகளுக்கு தெரிவிக்கப்பட்டது. மருத்துவமனை நிர்வாகம் தடுப்பூசி போட யாருக்கெல்லாம் விருப்பமோ அவர்கள் உடனடியாக மருத்துவமனையை […]

Categories
மாநில செய்திகள்

செப்.,6 நள்ளிரவில் ஆரம்பம்… அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!

செப்டம்பர் 6 ஆம் தேதி நள்ளிரவு முதல் அரசு விரைவு சொகுசுப் பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஊரடங்கு தளர்வாக பொது போக்குவரத்து என்பது அனுமதிக்கப்பட்டு இரு தினங்களாக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மேலும் தனியார் பேருந்துகள் அரசுக்கு வைத்த கோரிக்கையின்  அடிப்படையில் வருகின்ற ஏழாம் தேதி முதல் மாவட்டங்களுக்கு உள்ளாகவும் பேருந்துகள் இயக்கப்படும் என்று அரசு அறிவித்திருந்தது. அந்த வகையில் தற்போது அதுகுறித்த ஒரு முக்கிய அறிவிப்பை அரசு வெளியிட்டுள்ளது. அதாவது, சென்னையிலிருந்து மற்ற […]

Categories
உலக செய்திகள்

நள்ளிரவில் பெண்ணின் வீட்டிற்குள் நுழைந்த மர்ம நபர்… பலாத்கார முயற்சி… போலீஸ் வலைவீச்சு…!!

கனடாவில் நள்ளிரவில் ஒரு பெண்ணின் வீட்டிற்குள் புகுந்த மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர். ரொரன்ரோவில் உள்ள டுபண்ட் தெரு மற்றும் ஒஷிங்டன் அவென்யூ பகுதியில் இருக்கும் ஒரு வீட்டில் பெண் ஒருவர் தனிமையில் வசித்து வந்துள்ளார். வெள்ளிக்கிழமை அன்று நள்ளிரவு ஒரு மணியளவில் மர்ம நபர் ஒருவர் அப்பெண்ணின் வீட்டிற்குள் நுழைந்துள்ளார். அதன்பின் அப்பெண்ணிடம் தவறான முறையில் நடந்துகொண்டு, தாக்குதலை நடத்தியுள்ளார். அதன்பின் அப்பெண்ணின் வீட்டிலிருந்து ஒரு நொடிப் பொழுதுக்குள் அந்த மர்ம நபர் தப்பி […]

Categories

Tech |