இயக்குனர் ரிஷப் ஷெட்டி இயக்கத்தில் “காந்தாரா” திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், வசூலையும் குவித்து வருகின்றது. கன்னடத்தில் ரிஷப் ஷெட்டி இயக்கத்தில் கடந்த செப்டம்பர் மாதம் 30 ஆம் தேதி வெளிவந்து பெரும் வரவேற்பையும், வசூலையும் குவித்து வரும் படம் “காந்தாரா”. தமிழில் “பொன்னியின் செல்வன்” திரைப்படம், ஹிந்தியில் “விக்ரம் வேதா” போன்ற படங்கள் மற்ற மாநிலங்களில் அதிக தியேட்டர்களில் வெளியானதால் “காந்தாரா” திரைப்படத்தை அப்போது கர்நாடகா தவிர பிற மாநிலங்களில் சரியாக வெளியிட முடியவில்லை. […]
