இந்தியாவின் 75 வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு 4 மாவட்ட ஆட்சியருக்கு நல்ஆளுமை விருது வழங்கி தமிழக அரசு கௌரவித்துள்ளது. நாடு முழுவதும் வரும் திங்கட்கிழமை 75 ஆவது சுதந்திர தின விழா கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரையில் அலங்கார ஊர்திகள், காவலர்களின் அணிவகுப்பு மற்றும் கலை நிகழ்ச்சிகளுக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றது. தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகள், கல்லூரிகள் என அனைத்திலும் போட்டிகள் நடத்தப்பட்டு மாணவர்களுக்கு பரிசுகள் […]
