பணி நீட்டிப்பு மற்றும் பாக்கி சம்பளத்தை வழங்க கோரி தற்காலிக நர்சுகள் மற்றும் சுகாதார ஆய்வாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் கொரோனா தடுப்பு பணிக்காக 143 நர்சுகள், 20 சுகாதார ஆய்வாளர்கள் ஒப்பந்த அடிப்படையில் தற்காலிகமாக பணி நியமனம் செய்யப்பட்டு வந்த நிலையில் திடீரென பணிக்கு வர வேண்டாம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த தற்காலிக நர்சுகள், சுகாதார ஆய்வாளர்கள் பணி நீட்டிப்பு வழங்க கோரி மாவட்ட சுகாதாரத்துறை அலுவலகத்தில் […]
