ஆவடியில் உள்ள நரிக்குறவர் காலனியில் ரூபாய் 20 லட்சம் மதிப்பில் அடிப்படை வசதிகளுக்கான பணிகள் நடைபெற்று வருகிறது. ஆவடி பேருந்து நிலையத்திற்கு பின்னால் 50க்கும் மேற்பட்ட நரிக்குறவர்கள் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த மார்ச் மாதம் அந்த காலனியைச் சேர்ந்த பள்ளி மாணவிகள் தர்ஷினி, பிரியா, திவ்யா ஆகிய மூவரும் சமூகம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளை விளக்கமாக பேசி இணையதளம் மூலமாக வெளியிட்டனர். இதனைத் தொடர்ந்து அந்த மூன்று மாணவிகளையும் முதல்வர் மு.க ஸ்டாலின் அழைத்து […]
